Home /News /tamil-nadu /

அதிமுக அலுவலகத்திற்கு சீல்.. ஓபிஎஸ் வெளியேற்றம் - 144 தடை உத்தரவு

அதிமுக அலுவலகத்திற்கு சீல்.. ஓபிஎஸ் வெளியேற்றம் - 144 தடை உத்தரவு

அதிமுக அலுவலகத்திற்கு சீல்

அதிமுக அலுவலகத்திற்கு சீல்

ADMK Office : அதிமுக அலுவலகத்தில் இருந்து ஓபிஎஸ் வெளியேற்றப்பட்டுள்ளார். மேலும், கட்சி அலுவலத்திற்கு ஆர்டிஓ சீல் வைத்து  நடவடிக்கை மேற்கொண்டார்.

    அதிமுக அலுவலகத்தில் இருந்து ஓபிஎஸ் வெளியேற்றப்பட்டுள்ளார். மேலும், கட்சி அலுவலத்திற்கு ஆர்டிஓ சீல் வைத்து  நடவடிக்கை மேற்கொண்டார். அங்கே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு இன்று காலை ஓபிஎஸ் சென்றார். அப்போது, அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. ஓபிஎஸ் ஆதரவாளர் மீது இபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. மேலும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இபிஎஸ் ஆதரவாளர்களை தாக்கினர்.

    அதிமுக அலுவலகம் அருகே தொண்டர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இருதரப்பினரும் எதிர் எதிரே நின்றுக்கொண்டு கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது, கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.

    இந்நிலையில், ஓ.பன்னீர்செலம் ஆதரவாளர்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தின் பூட்டை உடைத்தும், ஆக்ரோஷமாக கதவை உடைதும் உள்ளே நுழைந்தனர். அதனைத் தொடர்ந்து, ஓபிஸ் தலைமை அலுவலத்தில் நுழைந்து, ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    கல்வீச்சு, மோதலுக்கு பின் ஓபிஎஸ் ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டில் அதிமுக தலைமை அலுவலகம் வந்தது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இபிஎஸ் ஆதரவாளர்களை விரட்டியடித்தனர். இதனால், அந்த பகுதி போர்களம் போல காட்சியளித்தது. அதிமுக அலுவலகத்தில் இபிஎஸ் படங்கள் கிழித்து, தீவைத்து எரிக்கப்பட்டன. காவல்துறையினர் உள்ளிட்ட பலர் காயம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து, வன்முறையில் ஈடுபட்ட அதிமுக தொண்டர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்நிலையில், வானகரத்தில் நடந்து வரும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டார். அத்துடன் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டார்.

    இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் அங்கே காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். கோட்டாசியர் சாய் வர்த்தினி ஓபிஎஸ் தரபிப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து அனுப்பி முயன்றனர். அப்போது ஓபிஎஸ் அலுவலகத்தின் வெளியே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர் அவர், அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டார். மேலும், அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள சாலைக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கே 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அதிமுக அலுவலகத்துக்கு பூட்டி சீல் வைத்தனர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: ADMK, EPS, O Pannerselvam, OPS

    அடுத்த செய்தி