திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு - இடைத்தேர்தல் எப்போது?

திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு - இடைத்தேர்தல் எப்போது?
உயிரிழந்த எம்.எல்.ஏக்கள் கே.பி.பி.சாமி மற்றும் காத்தவராயன்
  • News18
  • Last Updated: March 2, 2020, 4:51 PM IST
  • Share this:
திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகள் காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.

திருவொற்றியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.சாமி மற்றும் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் காத்தவராயன் ஆகியோர் சமீபத்தில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தனர்.

இதை தொடர்ந்து, அந்த இரு தொகுதிகளும் காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்தார். அது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அனுப்பியுள்ளதாக தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தகவல் அளித்தார்.


மேலும், 2021 பொது தேர்தல் நடத்த இன்னும் ஓராண்டு காலத்திற்கும் மேல் அவகாசம் உள்ள நிலையில், இந்த இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து மத்திய அரசிடம் ஆலோசித்து இந்தியப் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என்றும் தெரிவித்தள்ளார்.

அடுத்த 6 மாத காலத்திற்குள் காலியான தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்கிற விதி உள்ள நிலையில், இடைத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also see...
First published: March 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading