Home /News /tamil-nadu /

தேங்கியிருந்த மழை நீரில் நடந்துச்சென்ற தலைமை செயலக ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..

தேங்கியிருந்த மழை நீரில் நடந்துச்சென்ற தலைமை செயலக ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..

சென்னையில் அதிகரித்து வரும் தரை மின் மாற்றி விபத்துகளால் அடுக்கடுக்காக உயிர்கள் பறிபோகின்றன.

சென்னையில் அதிகரித்து வரும் தரை மின் மாற்றி விபத்துகளால் அடுக்கடுக்காக உயிர்கள் பறிபோகின்றன.

சென்னையில் அதிகரித்து வரும் தரை மின் மாற்றி விபத்துகளால் அடுக்கடுக்காக உயிர்கள் பறிபோகின்றன.

சென்னையில் பெய்து வரும் கனமழை வெள்ளத்தால் சென்னையின் அனைத்து பகுதிகளுமே தனித்தனி தீவுகளாக மாறியுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக வெள்ள நீரில் போராடும் மக்கள் தங்கள் உயிரை காக்கவும் போராட வேண்டிய அபாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்பாக தரையில் பதிந்து வைக்கப்பட்ட மின்மாற்றிகள் பழுதடைந்த நிலையில் கவனிப்பின்றி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன. வெள்ளநீர் அனைத்து பகுதிகளிலும் சூழ்ந்துள்ளதால் தரையில் பதிந்து வைக்கப்பட்டிருக்கும் மின்மாற்றி மின்கசிவு ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவது தொடர்ந்து வருகிறது.

சென்னை வேப்பேரி சாலை தெருவில் தனது மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகளோடு வசித்து வந்தவர் முரளி கிருஷ்ணன் (45). தலைமைச் செயலகத்தில் செய்தி-மக்கள் தொடர்புத்துறையில் பணியாற்றி வந்த இவர் இன்று காலை கடைக்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.

வீட்டின் முன்பகுதியில் தேங்கியிருந்த மழை தண்ணீரில் நடந்து சென்ற போது வீட்டின் முன் இருந்த இரும்பு கேட்டில் கை வைத்துள்ளார். அங்கு தரையில் வைக்கப்பட்டிருந்த மின்மாற்றியிலிருந்து சென்ற மின்வயரில் மின்கசிவு ஏற்பட்டு எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே முரளி கிருஷ்ணன் உயிரிழந்தார்.

அக்கம்பக்கத்தினர் உடனே வேப்பேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் பெரியமேடு மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து மின்இணைப்பை துண்டித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வேப்பேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் அதிகரித்து வரும் தரை மின் மாற்றி விபத்துகள்:

கடந்த 11 ம் தேதி மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் எச்டிஎப்சி பேங்க் அருகே சாலையில் தேங்கியிருந்த தண்ணீரில் தரையில் பதிந்து வைக்கப்பட்டிருந்த மின்மாற்றியிலிருந்து மின்கசிவு ஏற்பட்டு டீக்கடையில் பணிபுரிந்து வந்த திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த மாதவன்(60) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அதே 11 ம் தேதி திருவொற்றியூரில் கமலி என்ற 10 வயது சிறுமி தண்ணீரில் சென்ற போது தண்ணீரில் ஏற்பட்ட திடீர் மின்கசிவினால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதேபோல கடந்த 12 ம் தேதி திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் சாலையைச் சேர்ந்த சக்திவேல் (81) மந்தைவெளி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இரவு காவலாளியாக பணி முடித்துவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக மந்தைவெளி பஸ் டிப்போ சிக்னல் வழியாக நடந்து வந்துகொண்டிருந்த போது தேங்கிய தண்ணீரில் தரையில் பதிந்து வைக்கப்பட மின்மாற்றியின் மின்கசிவு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதே இடத்தில் ஒரு நாயும் மின்கசிவில் சிக்கி உயிரிழந்தது.

கடந்த 18 ம் தேதி மேடவாக்கம் அருகே தேங்கியிருந்த தண்ணீரில் மின்சார வயர் அறுந்து விழுந்ததில் 5 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
Published by:Esakki Raja
First published:

Tags: Chennai flood, TN Govt

அடுத்த செய்தி