திமுக கூட்டணியில் 5 நகராட்சி தலைவர் பதவி இடங்கள் ஒதுக்கப் பட்டிருந்த போதும் அதில் ஒன்றை மட்டுமே
காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு, ஒரு மேயர், 2 துணை மேயர், 5 நகராட்சி தலைவர், 9 நகராட்சி துணைத்தலைவர், 8 பேரூராட்சித் தலைவர், 11 பேரூராட்சித் துணைத் தலைவர் இடங்கள் ஒதுக்கப்பட்டன.
இவற்றுக்கான மறைமுக தேர்தல் இன்று தமிழகம் முழுவதும் நடந்தது. இதில், திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், திமுக வேட்பாளர்களை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
"என் உயிரிலும் மேலான தலைவரப்பா" மு.க.ஸ்டாலினின் உங்களில் ஒருவன் புத்தகத்தின் சுவாரஸ்யங்கள்
இதையடுத்து, திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தலைமையின் அறிவிப்புக்கு மாறாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள், பதவியிலிருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய மேயர், துணை மேயர் இடங்களை தவிர்த்து பெரும்பாலான நகராட்சி, பேரூராட்சி இடங்களை திமுக கைபற்றி உள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 5 நகராட்சி தலைவர் பதவி இடங்களில் ஒன்று மட்டுமே காங்கிரஸுக்கு கிடைத்துள்ளது. ஒதுக்கப்பட்ட 9 நகராட்சி துணைத் தலைவர் பதவி இடங்களில் காங்கிரஸ் 5 இடங்களையே கைப்பற்றி உள்ளது.
ஒதுக்கப்பட்ட 8 பேரூராட்சித் தலைவர் பதவி இடங்களில் காங்கிரஸ் 3 இடங்களையே கைப்பற்றி உள்ளது. ஒதுக்கப்பட்ட 11 நகராட்சி துணைத் தலைவர் பதவி இடங்களில் காங்கிரஸ் 6 இடங்களே கிடைத்துள்ளது.
நகராட்சி தலைவர்:
1. தேவக்கோட்டை - தேர்தல் ஒத்திவைப்பு
2. தேனி - திமுக
3. காங்கேயம் - திமுக
4. சுரண்டை - காங்கிரஸ்
5. கருமத்தம்பட்டி - திமுக
நகராட்சி துணை தலைவர்
1. கூடலூர் - காங்கிரஸ்
2. ஆரணி - அதிமுக
3. நரசிங்கபுரம் - காங்கிரஸ்
4. காரமடை - காங்கிரஸ்
5. குடியாத்தம் - அதிமுக
6. திருவேற்காடு - காங்கிரஸ்
7. குன்றத்தூர் - திமுக
8. தாராபுரம் - காங்கிரஸ்
9. உசிலம்பட்டி - தேர்தல் ஒத்திவைப்பு
பேரூராட்சி தலைவர்
1. மங்களம்பேட்டை - திமுக
2. சின்ன சேலம் - காங்கிரஸ்
3. வடுகப்பட்டி - திமுக
4. பூலாம்பட்டி - திமுக
5. பிக்கட்டி - காங்கிரஸ்
6. பேரையூர் - காங்கிரஸ்
7. பட்டிவீரன்பட்டி - திமுக
8. திருபெரும்புதூர் - திமுக
பேரூராட்சி துணைத்தலைவர்
1. சங்கராபுரம் - ஒத்திவைப்பு
2. ஜகதால - காங்கிரஸ்
3. கீழ்குந்தா - காங்கிரஸ்
4. மூலைக்கரைப்பட்டி - அதிமுக
5. கன்னிவாடி - திமுக
6. நங்கவல்லி - தேர்தல் ஒத்திவைப்பு
7. கருப்பூர் - தேர்தல் ஒத்திவைப்பு
8. டி.என்.பாளையம் - காங்கிரஸ்
9. நாட்றாம்பள்ளி - காங்கிரஸ்
10. உடையார்பாளையம் - காங்கிரஸ்
11. கணியூர் - காங்கிரஸ்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.