தி.மு.கவுடன் தொகுதி பங்கீடு சுமூகமாக முடிவடையும் - கே.எஸ்.அழகிரி உறுதி

தி.மு.கவுடன் தொகுதி பங்கீடு சுமூகமாக முடிவடையும் - கே.எஸ்.அழகிரி உறுதி

கே.எஸ்.அழகிரி மு.க.ஸ்டாலின்

தி.மு.கவுடன் தொகுதி பங்கீடு சுமூகமாக முடியும் என்று காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘திமுகவுடன் தொகுதி பற்றி பேச சொல்கிறோம். திமுகவுடன் பேசிய பிறகு பேச்சுவார்த்தை குறித்த தகவலை தெரிவிக்கிறோம். எத்தனை தொகுதிகள் என்பதை தோழமை கட்சிகள் பேசிக் கொள்ள வேண்டியது. சொல்லிவிட்டு பேச்சுவார்த்தைக்கு செல்ல முடியாது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை அச்சாகி கொண்டு இருக்கிறது. இந்த வாரத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.

  விருப்ப மனு வாங்கி கொண்டு இருக்கிறோம். 6 மற்றும் 7 ஆகிய தேதியில் நேர்காணல் நடக்கும். காங்கிரஸ் கட்சி எந்தந்த தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என முடிவு செய்யப்பட்டு உள்ளது. பேச்சுவார்த்தையின் போது அது பற்றி பேசப்படும்.

  தொகுதி பங்கீட்டு சுமூகமாக முடிவடையும். நான் பொய் பேச மாட்டேன். தமிழகத்தில் 2021ம் ஆண்டு காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று யாரும் சொல்லவில்லை. அதற்கான திட்டமிட்டு நடைமுறை, செயல் முறைகள் வேண்டும். இதற்கான ஏற்பாடுகள் செய்து வருகிறோம். நிச்சயமாக தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைப்போம். 2021ம் ஆண்டு நடக்கும் மதசார்பற்ற கூட்டணி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக்குவது என்று காங்கிரஸ் மட்டுமில்லாமல் கூட்டணி கட்சிகள் முடிவு செய்து உள்ளன. இதற்கும் அதற்கும் சம்பந்தமில்லை’ என்று தெரிவித்தார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: