• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • T-23 புலியை சுட்டுக்கொல்லும் உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கு: உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை..

T-23 புலியை சுட்டுக்கொல்லும் உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கு: உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை..

புலி

புலி

T-23 புலியை தேடும் பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில், நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.

  • Share this:
கடந்த 10 நாட்களாக வனத்துறைக்கு பெரும் சவாலாக இருக்கும் T-23 புலியை சுட்டுக்கொல்ல கொடுக்கப்பட்டிருக்கும் ஆணைக்கு தடை விதிக்கக்கூறி சென்னை உயர்நீதி மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டெல்லியை சேர்ந்த விலங்கியல் நல ஆர்வலர் சங்கீதா டோக்ரா என்பவர் இணையதளம் மூலம் இந்த இந்த மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவுடன் சேர்ந்து மற்றோரு பொதுநல மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் நாளை விசாரணைக்கு வரவுள்ளன.

அந்த மனுவில்,  11(1)(a) சட்டப்பிரிவின் கீழ் சுடுவதற்கு ஆணை பிறப்பித்த அதிகாரிகள் அதற்கான சீரான வழிமுறைகளை பின்பற்றவில்லை, முதலில் இந்த புலி ஆட்கொல்லி புலியா, 4 பேரையும் கொன்றது இந்த புலி தானா என இன்னும் நிரூபிக்கப்படவில்லை. மேலும், இந்த செயல் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய விதிகளுக்கு புறம்பான ஒன்று என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சீரான அளவில் மயக்க ஊசி செலுத்தி T23 புலியை உயிருடன் பிடிக்க வேண்டும், பிடித்த உடன் புலியை முதுமலை புலிகள் சரணாலயம் அல்லது சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அழைத்து வந்து சிகிச்சை கொடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளை வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில், 120 க்கும் மேற்பட்ட வீரர்கள் கூடலூர் முதல் மசினகுடி பகுதி வரை புலியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேடுதல் பணியில் 2 கும்கி யானைகள், கர்நாடகாவில் இருந்து அழைத்து வரப்பட்ட பயற்சி பெற்ற மோப்ப நாய்கள் புலி இருக்கும் இடத்தை கண்டிறியும் பணியில் ஈடுபட்டுள்ளன.

இதனிடையே, ஆட்கொல்லி புலியை மயக்க மருந்து செலுத்தி மட்டுமே பிடிக்க திட்டம். புலியை சுட்டுக் கொல்லும் எண்ணம் வனத்துறைக்கு இல்லை என தமிழ்நாடு முதன்மை உயிரின வனபாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் கூறியுள்ளார்.

எனினும், அந்த பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே கூட வராமல் பயத்தில் தான் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முன் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: