• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஆட்கொல்லி புலியை பிடிக்க 11ஆவது நாளாக தேடுதல் பணி : டிரோனுடன் களமிறங்கியுள்ள வனத்துறையினர்

ஆட்கொல்லி புலியை பிடிக்க 11ஆவது நாளாக தேடுதல் பணி : டிரோனுடன் களமிறங்கியுள்ள வனத்துறையினர்

11 ஆவது நாளாக தேடுதல் பணி

11 ஆவது நாளாக தேடுதல் பணி

மோப்பநாய்கள், டிரோன் உதவியுடன் வனத்துறையினர் ஆட்கொல்லி புலியை கண்டறிய முயன்று வருகின்றனர்.

  • Share this:
நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் சுற்றிதிரியும் ஆட்கொல்லி புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சி 11 ஆவது நாளாக தொடர்கின்றது. மோப்பநாய்கள், டிரோன்  உதவியுடன் வனத்துறையினர் புலியை கண்டறிய முயன்று வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி, சிங்காரா வனப்பகுதியில் சுற்றி திரியும் T23 என்ற புலி இதுவரை 30 க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் 4 மனிதர்களையும் கொன்றுள்ளது. இதனையடுத்து புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்து வண்டலூர் பூங்காவிற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு புலியை பிடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

கடந்த 10 நாட்களாக வனத் துறையினரிடம் புலி சிக்காத  நிலையில்  இன்று 11ஆவது நாளாக வனப் பகுதிக்குள் தேடுதல் பணியானது நடைபெற்று வருகின்றது. இரண்டு வனத்திறை மருத்துவகுழு மற்றும் 50-க்கு மேற்ப்பட்ட வனத்துறையினர்  சிங்காரா மற்றும் மசினகுடி  வனப்பகுதியில் T23 என்னும் புலியை தேடி வருகின்றனர்.

நேற்று புலியின் கால்தடத்தை சத்தியமங்கலம்  மோப்பநாய் டைகர் கண்டறிந்த நிலையில் மாலை நேரமாகிவிட்டதால் அதை பின்தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இன்று சிங்காரா வனப்பகுதியில் ஆட்கொல்லி புலியின் நடமாட்டம் இருப்பது தடயங்கள் மூலம்  தெரியவந்தது.

இதனை தொடர்ந்து கவச உடை அணிந்த வனத்துறை மருத்துவ குழுவினர் மயக்க ஊசி செலுத்தும் துப்பாக்கிகளுடன் அடர் வனப்பகுதிக்குள் விரைந்துள்ளனர். மேலும் ட்ரோன் கேமரா மூலமும் வனப்பகுதியை கண்காணிக்கும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கடந்த இரு தினங்களாக புலி நடமாட்டம் தொடர்பாக எந்த தகவலும் இல்லாத நிலையில் நேற்று மாலை முதல் ஆட்கொல்லி புலி நடமாடும் பகுதிகளை கண்காணிக்க முடிவதால் விரைவில் ஆட்கொல்லி புலியை பிடித்துவிடுவோம் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Must Read : தமிழ்நாட்டில் இந்த மாவட்டங்களில் இன்று ’மிக கனமழை’.. வானிலை மையம் எச்சரிக்கை

40 இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்களையும் அவ்வப்போது வனத்துறையினர்  ஆய்வு செய்து வருகின்றனர். சிங்காரா வனப்பகுதியில் மூங்கில்கள் அதிகளவு இருப்பதால் அவற்றுள் புலி பதுங்கி கொள்கின்றது. இதனால் ஆட்கொல்லி புலியின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிப்பதில் வனத்துறைக்கு  சிரமங்கள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: