எல்லா வளமும் இருந்தும் வலிமையற்று இருக்கிறோம் - சீமான்

எல்லா வளமும் இருந்தும் வலிமையற்று இருக்கிறோம் - சீமான்

சீமான்

நம்மை மீட்க யாராவது வருவார்கள் என்ற நோய் நம் மக்களுக்கு வந்துவிட்டது என்றும், எல்லா வளமும் இருந்தும் வலிமையற்று இருக்கிறோம் எனவும் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

 • Share this:
  நம்மை மீட்க யாராவது வருவார்கள் என்ற நோய் நம் மக்களுக்கு வந்துவிட்டது என்றும், எல்லா வளமும் இருந்தும் வலிமையற்று இருக்கிறோம் எனவும் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுகளில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நடராஜன், குமாரபாளையம் வேட்பாளர் வருண் சுப்பிரமணியம் ஆகியோரை ஆதரித்து சீமான் வேனில் இருந்தபடியே பிரச்சாரம் மேற்கொண்டார்.

  அப்போது பேசிய சீமான், “வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட மக்கள் தங்கள் வரலாற்றை உருவாக்குவார்கள். ஆனால், நமது மீட்புக்கு யாராவது வருவார்கள் என்ற நோய் நம் மக்களுக்கு வந்துவிட்டது. மற்றவர்களின் வரலாறுகளை படிக்கிறோம் நம் இனம் பகையாக இருக்கின்றது. மக்கள் ஏதோ ஒன்றை வைத்து வளமாய் வாழ்கிறார்கள்.

  எல்லா வளமும் இருந்தும் வலிமையற்று இருக்கிறோம். ஒருவன் கை ஏந்தினால் அது பிச்சை, ஊரே கை ஏந்தினால் அது இலவசம். எந்த பொருளும் இலவசமாக வழங்கப் படுவதில்லை. நமது பணம், நம் உழைப்பில் வியர்வையில் வந்த பணத்தை திருடி இலவசம் என்று கொடுக்கப்படுகின்றது.

  ஊழல் லஞ்சம் யாருக்கும் பிடிக்க வில்லை. ஆனால் யார் செய்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். கோயில் கருவறை முதல் தாயின் கருவறை வரை ஊழல் பரவியுள்ளது. காசை முதலீடு செய்கிறார்கள். சுய லாபத்திற்காக மக்கள் வாக்கை வாங்க நினைக்கிறார்கள். மக்கள் சேவை என்ற நிலை மாறி அரசியல் தொழிலாக மாறிவிட்டது.

  சரியில்லை என்று சொல்வதை விட, சரியான ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். தேடி தேடிப் போய் உணவு உடை எடுக்கும் நாம், நம் 5 ஆண்டு எதிர்காலத்தை தீர்மானிக்க நல்லதை தேடுவதில்லை.

  Must Read : சசிகலா மீது நன்மதிப்பு உள்ளது... அதிமுகவில் இணைப்பது குறித்து பரிசீலிப்போம் : ஓபிஎஸ் கருத்து

   

  காவலர், ராணுவ வீரருக்கு வயது வரம்பு இருக்கின்றது. ஆனால் அரசியல் தலைவருக்கு வயதில்லை. கடன் தள்ளுபடி என்று சொல்கிறார்கள். ஏன் கடனாளியானார்கள் என்று சிந்திப்பதில்லை. தமிழ்நாடு அரசு 6லட்சம் கோடிகடன் தள்ளுபடி செய்திருப்பதாக பெருமை சேசுகிறது. என்று கூறிய சீமான் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு சீமான் அப்போது கேட்டுக் கொண்டார்.
  Published by:Suresh V
  First published: