சாதி, மதங்கள் நமது அடையாளம் இல்லை.. மொழி ஒன்றே நமது அடையாளம் - சீமான்

சாதி, மதங்கள் நமது அடையாளம் இல்லை.. மொழி ஒன்றே நமது அடையாளம் - சீமான்

சீமான்

திமுக என்பது திருடர்கள் முன்னேற்ற சங்கம், அதிமுக என்பது அனைத்து திருடர்கள் முன்னேற்ற சங்கம் என்றார் சீமான்.

 • Share this:
  மாநில சுயாட்சி என்று பேசி வரும் திராவிட கட்சியினர் அனைத்து உரிமைகளையும் மத்திய அரசிடம் பறிகொடுத்து விட்டனர் என பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய பிரச்சாரம் செய்தபோது அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

  மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் தொகுதிக்குட்பட்ட செம்பனார்கோவிலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பூம்புகார் தொகுதி வேட்பாளர் காளியம்மாளை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

  அப்போது அவர் பேசுகையில், நாம் தமிழர் கட்சி 117 தொகுதிகளை மகளிருக்கு ஒதுக்கியுள்ளது. ஆனால் திமுக 12 தொகுதிகளையும், அதிமுக 14 தொகுதிகளையும் மட்டுமே ஒதுக்கிவிட்டு சமூகநீதி குறித்து பேசுகிறார்கள். இந்த தேர்தலில் எனக்கு முதலமைச்சராக வாய்ப்பு தாருங்கள் என கெஞ்சி கேட்கிறேன். நான் வெற்றி பெற்றால் தமிழகத்தில் ஒரு மீனவன்கூட கொல்லப்பட மாட்டான்.

  நெய்தல் படை என்ற படையை உருவாக்கி மீனவர்களை பாதுகாப்பேன். நான் சொன்னதைக் கேட்டு கேரளாவில் பினாயி விஜயன் நெய்தல் படையை உருவாக்கியுள்ளார். ஜெகன்மோகன் ரெட்டியும் நான் சொல்வதை செய்து வருகிறார். இப்போது தமிழக அரசும் நான் சொல்வதை மெல்லமெல்ல கேட்டு வருகிறது.

  நான் முதல்வரானால் வீடுகளிலும், படுக்கை அறையும் தவிர காவல்துறை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சிசிடிவி பொருத்தி கண்காணிப்பேன். பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பேன். எந்த குற்றத்திற்கும் மரண தண்டனை வழங்கக் கூடாது என்பது எங்களது கொள்கை. ஆனால் பாலியல் குற்றத்துக்கு மரணத்தை தவிர வேறு எந்த தண்டனையும் வழங்க கூடாது. உயிர் பயம் ஒன்றே மானுட சமுதாயத்தை ஒழுங்குபடுத்தும்.

  சாதி, மத அடிப்படையில் வாக்களித்தால் எப்படி தமிழனுக்கு அதிகாரம் கிடைக்கும்? சாதி மதங்கள் நமது அடையாளம் இல்லை. மொழி ஒன்றே நமது அடையாளம். பாஜகவுக்கு தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் நிறுத்துவதற்கு கூட ஆட்கள் கிடையாது. ஆட்சிக்கு வந்தவுடன் மக்களின் அனைத்து குறைகளையும் தீர்ப்பேன் என்று மனுக்களை வாங்கும் ஸ்டாலின் கச்சதீவு, நீட், மீத்தேன் ஹைட்ரோகார்பன், டாஸ்மாக் பிரச்சினைகளை தீர்த்து வைப்பாரா? கடந்த தேர்தலில் டாஸ்மாக்கை மூடுவேன் என்ற சொல்லின் ஸ்டாலின் இந்த தேர்தலில் அது பற்றி வாயை திறக்கவில்லை.

  Must Read : வாக்காளர் வைபோகம்... அன்பளிப்பு பெறுவதும் அளிப்பதும் வாக்களிக்கும் விழாவில் பெருங்குற்றம்: தேர்தல் ஆணையம் அழைப்பிதழ்

   

  இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதை எதிர்ப்பாளர்களானால் நீங்கள் ஆதரிக்க வேண்டிய சின்னம் விவசாயி. திமுக என்பது திருடர்கள் முன்னேற்ற சங்கம், அதிமுக என்பது அனைத்து திருடர்கள் முன்னேற்ற சங்கம். திருடனுக்கு திருடன் பாதுகாப்பாக இருக்கிறார். நாம்தான் அவர்களை நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறோம். மாநில தன்னாட்சி என்று பேசி வரும் திராவிடக் கட்சிகள் அனைத்து உரிமைகளையும் மத்திய அரசிடம் பறிகொடுத்து விட்டனர். இந்த நாடும் மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்றால் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள்” என்றார்.
  Published by:Suresh V
  First published: