பாஜக பூச்சாண்டி... நான் இந்தியாவிற்கே தமிழ்நாடு என்று பெயர் வைப்பேன் - சீமான் கொந்தளிப்பு

சீமான்

பாஜக பூச்சாண்டி என்றும் தமிழ்நாட்டின் பெயரை மாற்ற நினைக்கும் பாஜக முடிந்தால் உள்ளே வரட்டும் எனவும் கூறிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நான் இந்தியாவிற்கே தமிழ்நாடு என்று பெயர் வைத்து விடுவேன் என்று கூறியுள்ளார்.

 • Share this:
  பாஜக பூச்சாண்டி என்றும் தமிழ்நாட்டின் பெயரை மாற்ற நினைக்கும் பாஜக முடிந்தால் உள்ளே வரட்டும் எனவும் கூறிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நான் இந்தியாவிற்கே தமிழ்நாடு என்று பெயர் வைத்து விடுவேன் என்று கூறியுள்ளார்.

  திருச்சியில், 9 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து சத்திரம் பேருந்து நிலையம் அருகே நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், அரசியல் விடுதலை ஒன்று தான் கடைசியாக நம்மிடமுள்ள வாய்ப்பு.

  கட்சி தொடங்கி அரசியல் நடத்தவந்தவனா நான்? படமெடுத்து பிழைக்க வந்தவன் நான் ஆனால், என் இன மானமா, வருமானமா என வரும்பொழுது, என் இன மானம்தான் முக்கியம் என முடிவெடுத்தேன்.

  அதிமுக அம்மாவின் ஆட்சி என்று கூறுகிறார்கள் டிடிவி தினகரன், அம்மாவின் ஆட்சி நடத்துவோம் என்று சொல்கிறார்கள், ஆனால் அவர்கள் கேட்கும் அம்மா இல்லை. அதுபோல் மு.க.ஸ்டாலினால் அப்பாவின் ஆட்சியைப் போல் நடத்துவேன் என்று சொல்ல முடியுமா?

  நிலவைக் காட்டி சோறு ஊட்டலாம். மயிலை காட்டி சோறு ஊட்டலாம், ஆனால் பூச்சாண்டியை காட்டி சோறு ஊட்டுகின்றனார். அதுதான் பாஜக பூச்சாண்டி. உழைக்காமல் மக்களை சோம்பேறியாக்கும் அளவிற்கு இலவசங்களை தரும் தற்குறி தலைவர்கள் உள்ளனர்.

  குரங்கு கையில் பூமாலை. இவர்களின் கையில் நாடு, ஒரு புத்தகம் படிப்பது இல்லை, எந்த சிந்தனையும் வாசிப்பதில்லை, எனக்கு என்னமோ இவர்கள் தினத்தந்தி படிக்கிறார்களா என்று கூட தெரியவில்லை. தமிழ்நாட்டின் பெயரை மாற்ற நினைக்கும் பாஜக முடிந்தால் உள்ளே வரட்டும், நான் இந்தியாவிற்கே தமிழ்நாடு என்று பெயர் வைத்து விடுவேன்.

  நாட்டின் பிரதமர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர் என இத்தனை பேர் இருந்தும் 20 சீட்டுகளில் போட்டியிடும் பாஜக. அதிலும் ஜெயிக்க போவதில்லை. 50 ஆண்டுகளாக செய்யாத ஒன்றை அடுத்த 5 ஆண்டுகளில் எப்படி செய்துவிடப் போகிறார்கள்?

  Must Read : எய்ம்ஸ் மருத்துவமனை கட்டவிருந்த இடத்தில் செங்கலை திருடிவிட்டார் உதயநிதி ஸ்டாலின் - பாஜக நிர்வாகி போலீசில் புகார்

   

  நேரமாகிவிட்டது என் மீது வழக்கு போட்டு விடுவார்கள்! நான் என்றால் வழக்குப் போடுவதில் உடனடியாக செயல்படுவார்கள். அவ்வளவு நேர்மையான அரசு உள்ளது.” என்று கூறி தன் உரையை நிறைவு செய்தார் சீமான்.
  Published by:Suresh V
  First published: