ஓட்டுக்காக அல்ல... நாட்டுக்காக தேர்தலில் நிற்கிறேன் - சீமான்

ஓட்டுக்காக அல்ல... நாட்டுக்காக தேர்தலில் நிற்கிறேன் - சீமான்

சீமான்

சென்னை போரூரில் தேர்தல் பிரச்சாரதில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நாம் தமிழர் வெற்றி என்பது வரலாற்றின் மாபெரும் புரட்சி என்றும் தான் ஓட்டுக்காக அல்ல, நாட்டுக்காக தேர்தலில் நிற்கிறேன் என்றும் கூறினார்.

  • Share this:
    சென்னை போரூரில் தேர்தல் பிரச்சாரதில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நாம் தமிழர் வெற்றி என்பது வரலாற்றின் மாபெரும் புரட்சி என்றும் தான் ஓட்டுக்காக அல்ல, நாட்டுக்காக தேர்தலில் நிற்கிறேன் என்றும் கூறினார்.

    தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதன்படி தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்களே இருக்கும் நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில், மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கணேஷ்குமாரை ஆதரித்து போரூரில் சீமான் திறந்த வேனில் இருந்தவாறு பிரச்சாரம் மேற்கொண்டார்.

    அப்போது அவர் பேசுகையில், “ஆட்சி மாற்றம் என்பது திமுக, அதிமுக கட்சிகளை மாறி, மாறி ஆட்சியில் அமர்த்துவது இல்லை. அப்படி செய்தால் ஆட்கள் மாறுவார்கள் ஆனால் நிர்வாகம் மாறாது. மழை நீரை வீட்டில் சேமிக்க சொல்லும் நீங்கள் நாட்டில் எவ்வளவு சேமிக்கிறீர்கள். ஆண்டுக்கு நான்கு ஆணிரம் டிஎம்சி மழை பெய்கிறது.

    ஆனால், 4 ஆயிரம் டிஎம்சியில் வெறும் 1,500 டிஎம்சி நீர் மட்டும் சேமிக்கப்பட்டு, மீதமுள்ள அனைத்தும் தண்ணீரும் கடலில் விட்டு விடுகிறோம். 150 டிஎம்சி தண்ணீருக்கு கர்நாடகாவிடம் கையேந்தி நிற்கிறோம். இந்த நீரை சேமிக்க என்ன திட்டம் உள்ளது.” என்று கேள்வி எழுப்பினார்.

    தொடர்ந்து பேசிய சீமான், “வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. 50 ஆண்டுகள் செய்யாத நல்லதை அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் எப்படி செய்வார்கள் என நம்புகிறீர்கள். கல்வி மானுட உரிமை அதை கொடுப்பது அரசின் கடமை. மருத்துவம், குடிநீர் ஆகியவற்றை இலவசமாக வழங்க வேண்டும்.

    Must Read : இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு கொரோனா...

     

    உங்களுக்கு விருப்பம் இருந்தால் எங்களுக்கு ஓட்டு போடுங்கள். நான் ஓட்டுக்காக நிற்கவில்லை மாறாக நாட்டுக்காக நிற்கிறேன். திமுக, அதிமுக வெற்றி என்பது ஒரு நிகழ்வு, ஆனால், நாம் தமிழர் கட்சியின் வெற்றி என்பது வரலாற்றின் மாபெரும் புரட்சி. மாறுதலுக்கான தேர்தலாக இதை எடுத்து கொள்ளுங்கள்” இவ்வாறு கூறினார்.
    Published by:Suresh V
    First published: