நமது நாட்டில் 28 கோடி பேர் இரவில் உண்ண உணவு இல்லாதவர்களாக உள்ளனர் - சீமான்

நமது நாட்டில் 28 கோடி பேர் இரவில் உண்ண உணவு இல்லாதவர்களாக உள்ளனர் - சீமான்

சீமான்

ஊழல், லஞ்சம் பெறுபவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களுக்கு வாக்களிப்பவர்களுக்கு பாவம் வரும்...

 • Share this:
  நமது நாட்டில் 28 கோடி பேர் இரவில் உண்ண உணவில்லாதவர்களாக உள்ளனர் என்றும், அனைத்தையும் தனியாருக்கு தாரைவார்த்ததால் வளரும் நாட்டு பட்டியலில் இருந்தே இந்தியாவை தூக்கவிட்டனர் எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் துரைமாணிக்கம், திருப்பத்தூரில் கோட்டைகுமார் ஆகியோரை ஆதரித்து சீமான் பிரச்சாரம் செய்தார்.

  அப்போது அவர் பேசுகையில்,  “நாங்கள் வந்தபிறகு ஒரு மீனவரை கூட கொல்லவில்லை, என பாஜகவினர் கூறுகின்றனர். சமீபத்தில் கூட 4 மீனவர்களை இலங்கைகாரர்கள் கொன்றார்கள். அதை கண்டித்து பிரதமரோ, ஹெச்.ராஜாவோ ஒரு வார்த்தை கூட பேசியது கிடையாது. ஏன் காங்கிரஸ் தலைவர் கூட கண்டிக்கவில்லை. ஆனால் தற்போது நமது வீட்டு வாசலில் வாக்குக்காக நிற்கின்றனர்.

  ஒற்றை கட்சி ஆட்சி முறையை ஒழித்தால்தான் மத்தியில் கூட்டாட்சி, தமிழகத்தில் தமிழன் ஆட்சி மலரும். நமது நாட்டில் 28 கோடி பேர் இரவில் உண்ண உணவில்லாதவர்களாக உள்ளனர்.  இதன்மூலம் அவர்கள் ஆண்ட லட்சனத்தை அறிந்து கொள்ளலாம். அனைத்தையும் தனியாருக்கு தாரைவார்த்ததால் வளரும் நாட்டு பட்டியலில் இருந்தே இந்தியாவை தூக்கவிட்டனர்.

  ஊழலில் தலைசிறந்த நாடுகளில் ஒன்று நைஜிரியா, மற்றொன்று இந்தியா. கச்ச தீவை எடுத்து கொடுக்கும்போது ஒன்றும் செய்யாமல், இப்போது கச்சதீவை மீட்போம் என்கின்றனர். ஆனால் கச்சத்தீவை கொடுத்தது காங்கிரஸ்தான் என்று பாஜக கூறுகிறது. மீட்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை இதன்மூலம் இரு கட்சிகளும் வேறு, வேறாக இருந்தாலும் கொள்கை ஒன்று தான்.

  Must Read : திமுக பெட்டி வாங்கியே பழக்கப்பட்ட கட்சி! - முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

   

  50 ஆண்டு காலம் வாக்கு செலுத்தி நாட்டை வீணாக்கியாச்சு ஊழல், லஞ்சம் பெறுபவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களுக்கு வாக்களிப்பவர்களுக்கு பாவம் வரும்.  செய்த பாவத்திற்கு எங்களுக்கு ஒரு முறை வாக்களித்து பரிகாரத்தை தேடி கொள்ளுங்கள்” இவ்வாறு சீமான் கூறினார்.
  Published by:Suresh V
  First published: