சென்னை தி.நகரில் உள்ள ப்ரைம் சரவணா ஸ்டோருக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.கடந்த 2017 ம் ஆண்டு ப்ரைம் சரவணா மற்றும் தங்க மாளிகை இந்தியன் வங்கியிடம் ரூ.240 கோடி பெற்ற கடன் பெற்றுள்ளது. தற்போது 400 கோடி வங்கிக்கு செலுத்த வேண்டிய பணம் இன்னும் செலுத்தவில்லை.
இதனால் இந்தியன் வங்கி எழும்பூர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் ப்ரைம் சரவண ஸ்டோருக்கு சீல் வைக்க உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து அதிகாரிகள் இன்று கடைக்கு சீல் வைத்தனர்.
எழும்பூர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அட்வகேட் கமிஷ்னர் துரியன் முன்னிலையில் ப்ரைம் சரவணா ஸ்டோருக்கு சீல் வைக்கப்பட்டது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.