பெரியார் சிலைக்கு தீவைப்பு: எஸ்டிபிஐ கட்சி கண்டனம்

பெரியார் சிலை

தமிழர்கள் மிகவும் மதிக்கக் கூடிய, போற்றக்கூடிய தலைவர்களின் நன்மதிப்பை கெடுக்கும் செயலில் ஈடுபடுபவர்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

 • Share this:
  கிருஷ்ணகிரி அருகே பெரியார் சிலைக்கு தீவைக்கப்பட்ட சம்பவத்திற்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத்தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம் கத்தாழைமேடு அருகே உள்ள சமத்துவபுரத்தில் பெரியாரின் வெண்கல சிலை மீது டயரைக் கொண்டு சமூக விரோதிகள் எரித்துள்ளனர். இந்த செயலை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இத்தகைய செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என என கேட்டுக்கொள்கின்றேன்.

  தமிழர்கள் மதிக்கக் கூடிய தலைவர்களின் சிலைகள் மீது தாக்குதல் நடத்துவதும், அந்த சிலைகளை அவமதிப்பு செய்யும் செயல்களும் தொடர்ச்சியாக நடந்தேறி வருகின்றன. அதேபோல் சாதி சமயங்களை கடந்து, இன மொழிகளை கடந்து, எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரை, ஒரு மத அடையாளத்திற்குள் கொண்டு போய் சிறுமைப்படுத்தும் வகையில் திருவள்ளுவரை காவிமயமாக்கும் நிகழ்வுகளும் நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக நடந்தேறி வருகின்றன.

  Must Read : பெரியார் சிலைக்கு தீ வைத்தவர் கைது.. காரணம் என்னவென்று வாக்குமூலம்

   

  தமிழர்கள் மிகவும் மதிக்கக் கூடிய, போற்றக்கூடிய தலைவர்களின் நன்மதிப்பை கெடுக்கும் விதத்திலும், வன்முறை நோக்கிலும் நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதலில் ஈடுபடுபவர்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Suresh V
  First published: