அமமுக கூட்டணி: எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

அமமுக கூட்டணி: எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

எஸ்.டி.பி.ஐ.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கூட்டணியில் போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து கூட்டணி வேட்பாளர்களையும் வெற்றிபெறச் செய்யவேண்டும் என்றார்.

 • Share this:
  தமிழக சட்டமன்றத் தேர்தலில், எஸ்.டி.பி.ஐ., அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியுடன் இணைந்து, ஆலந்தூர், ஆம்பூர், பாளையங்கோட்டை, திருவாரூர், மதுரை மத்தி, திருச்சி மேற்கு ஆகிய 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

  இந்நிலையில் இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் இன்று (மார்ச்.12), சென்னையில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

  எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில், கட்சியின் தேசிய துணைத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி, தேசிய பொதுச்செயலாளர் அப்துல் மஜீத் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.

  மேலும், மாநில துணைத் தலைவர் அம்ஜத் பாஷா, மாநில பொதுச் செயலாளர்கள் நிஜாம் முகைதீன், அப்துல் ஹமீது, அச.உமர் பாரூக், மாநில பொருளாளர் வி.எம்.அபுதாஹிர், மாநில செயலாளர்கள் அமீர் ஹம்சா, ரத்தினம், அஹமது நவவி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ.கே.கரீம், வழ.ராஜா முகமது, பஷீர் சுல்தான், ஷஃபிக் அகமது, எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்க மாநில தலைவர் முகம்மது பாரூக், வர்த்தகர் அணி மாநில தலைவர் முகைதீன் மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

  தொடர்ந்து எஸ்.டி.பி.ஐ. சார்பில் போட்டியிடும் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர் விவரங்களை கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அப்துல் மஜீத் வெளியிட்டார்.

  தொகுதி மற்றும் வேட்பாளர்கள் விவரம் பின்வருமாறு:தொகுதி மற்றும் வேட்பாளர்கள் விவரம் பின்வருமாறு:

  1.பாளையங்கோட்டை - V.M.S. முகம்மது முபாரக் (எ) நெல்லை முபாரக்(மாநில தலைவர் – எஸ்.டி.பி.ஐ. கட்சி, தமிழ்நாடு)

  2. ஆம்பூர் - அச.உமர் பாரூக்(மாநில பொதுச்செயலாளர் – எஸ்.டி.பி.ஐ. கட்சி, தமிழ்நாடு)

  3. ஆலந்தூர் - M.முகம்மது தமீம் அன்சாரி(மாவட்ட பொ.செயலாளர் – எஸ்.டி.பி.ஐ. கட்சி, தென்சென்னை )

  4. மதுரை மத்தி - G.சிக்கந்தர் பாட்ஷா(மாவட்ட துணைத் தலைவர் – எஸ்.டி.பி.ஐ. கட்சி, மதுரை ; வர்த்தகர் அணி மாநில துணைத் தலைவர்)

  5. திருவாரூர்  - M.A.நஸிமா பானு(மாநில பொதுச்செயலாளர் – விமன் இந்தியா மூவ்மெண்ட்)

  6. திருச்சி மேற்கு - R.அப்துல்லா ஹஸ்ஸான்(மாவட்ட தலைவர் – எஸ்.டி.பி.ஐ. கட்சி, திருச்சி)  Must Read : திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு : கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டி... 13 பெண்களுக்கு வாய்ப்பு

   

  தொடர்ந்து உரையாற்றிய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அப்துல் மஜீத், தமிழக சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கூட்டணியில் போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து கூட்டணி வேட்பாளர்களையும் வெற்றிபெறச் செய்யுமாறு வாக்காளர்களுக்கும், கூட்டணியின் வெற்றிக்காக தீவிர களப்பணியாற்றுமாறு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தொண்டர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.
  Published by:Suresh V
  First published: