ரமலான் மாதத்தை முன்னிட்டு ஊரடங்கு வழிகாட்டுநெறிமுறைகளில் சில தளர்வுகள் வேண்டும் - எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை!

ரமலான் மாதத்தை முன்னிட்டு ஊரடங்கு வழிகாட்டுநெறிமுறைகளில் சில தளர்வுகள் வேண்டும் - எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை!

ரமலான் தொழுகை (Image: Dipa Chakraborty / Shutterstock.com)

கோவிட்-2 வது அலை பரவல் தொடர்பாக ஏப்ரல் 10 முதல் அமல்படுத்தப்பட உள்ள சில வழிமுறைகளுடன் கூடிய பகுதிநேர ஊரடங்கு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  ரமலான் மாதத்தை முன்னிட்டு தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு வழிகாட்டுநெறிமுறைகளில் சில தளர்வுகள் வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

  அதிகரித்துவரும் கொரோனா 2-வது அலை பரவல் தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள பகுதிநேர ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளில் சில தளர்வுகள் வேண்டி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக் தமிழக தலைமைச் செயலாளர் ராஜூவ் ரஞ்சனுக்கு கோரிக்கை மனு அளித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ.கே.கரீம், ராஜா முகமது உடன் இருந்தனர்.

  இதுதொடர்பாக அவர் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, கோவிட்-2 வது அலை பரவல் தொடர்பாக ஏப்ரல் 10 முதல் அமல்படுத்தப்பட உள்ள சில வழிமுறைகளுடன் கூடிய பகுதிநேர ஊரடங்கு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி மதவழிபாடு தொடர்பான நிகழ்வுகளுக்கு இரவு 8 மணி முதல் அதிகாலை வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்.14 முதல் இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதம் தொடங்குகிறது.

  Also read... அரசு எடுத்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்!

  இம்மாதத்தில் அதிகமான அளவு இரவுநேர வணக்க வழிபாடுகளில் இஸ்லாமியர்கள் ஈடுபடுவார்கள். கடந்த ஆண்டு கோவிட் பரவல் தொடர்பாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் இஸ்லாமியர்கள் ரமலான் மாத வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

  ஆகவே, இதனை கருத்தில்கொண்டு குறைந்தபட்சம் இரவு 8 மணி முதலான ஊரடங்கு அறிவிப்பை இரவு 10 மணிக்கு என மாற்றினால் அது இஸ்லாமியர்களின் ரமலான் மாத வணக்க வழிபாடுகளை நிறைவேற்ற மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பதால், இரவுநேர ஊரடங்கை இரவு 8 மணியிலிருந்து, இரவு 10 மணிக்கு மாற்றி அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தங்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன் என்று அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: