ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அடுத்த மாதம் சந்திர கிரகணம்.. எப்போது தெரியுமா?

அடுத்த மாதம் சந்திர கிரகணம்.. எப்போது தெரியுமா?

சந்திர கிரகணம்

சந்திர கிரகணம்

Lunar eclipse | சந்திரகிரகணத்தை காண தொலைநோக்கி போன்ற கருவிகளோ, கண்களை காத்து கொள்ள தனிப்பட்ட கவனமோ தேவையில்லை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    நவம்பர் மாதம் 8ஆ தேதி முழு சந்திர கிரகணம் நிகழவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக , தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று பகுதி சூரியகிரகணம் நிகழவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், வரும் நவம்பர் 8ஆம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழவுள்ளதாகவும், இந்திய நேரப்படி 2.39 மணிக்கு தொடங்கி 6.19 மணிக்கு முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 5.38 மணிக்கு தான் உதயமாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    சந்திரகிரகணத்தை காண தொலைநோக்கி போன்ற கருவிகளோ, கண்களை காத்து கொள்ள தனிப்பட்ட கவனமோ தேவையில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மீண்டும் அக்டோபர் மாதம் 28ஆம் தேதி 2023ஆம் ஆண்டு தான் சந்திர கிரகணத்தை காணலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Published by:Anupriyam K
    First published:

    Tags: Eclipse, Lunar eclipse