• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • T23 புலியை பிடிக்க அறிவியல் பூர்வமான வியூகங்கள் : முதன்மை வன உயிரின பாதுகாவலர் தகவல்

T23 புலியை பிடிக்க அறிவியல் பூர்வமான வியூகங்கள் : முதன்மை வன உயிரின பாதுகாவலர் தகவல்

T23 புலியை பிடிக்க நடவடிக்கை

T23 புலியை பிடிக்க நடவடிக்கை

புலியை பிடிக்க மன்றாடியார் வனப் பகுதியிலும் டிரோன் மூலம் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகின்றது.

  • Share this:
    நீலகிரி மாவட்டம் முதுமலை பகுதியல் வனத்துறையினருக்கு போக்கு காட்டி வரும் மசினகுடி T23 புலியை மயக்க ஊசி செலுதி பிடிக்கும் முயற்சி 12ஆவது நாளாக தொடரும் நிலையில், தமிழக முதன்மை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ், புலியை பிடிக்க அறிவியல் பூர்வமான வியூகங்கள் அமைத்து செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

    முதுமலை புலிகள் காப்பகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சேகர் குமார் நீரஜ், புலி மனிதர்களை சில இடங்களில் கொன்றது குறித்து அறிவியல் பூர்வமான விசாரணை நடைபெற்று வருகின்றது. தினமும் புதிய வியூகங்களை அறிவியல் பூர்வமாக செயல்படுத்தி புலியை பிடிக்க முயன்று வருகின்றோம். புலியின் பாதுகாப்பு, வனத்துறையினர் பாதுகாப்பு கருத்தில் வைத்து பணிகள் நடைபெற்று வருகின்றன.

    சிங்காரா பகுதியில் T23 புலியின் தடயங்கள் இருப்பதால் அங்கு கண்காணிப்பு அதிகப்படுத்தி இருக்கின்றோம். காட்டில் T23 புலிக்கு வேட்டையாடுவதில் வயது காரணமாக சிரமங்கள் இருக்கின்றது. வனப்பகுதியில் பரண்கள் அமைத்து புலியை கண்காணித்து வருகின்றனர். அந்த பகுதியில் எந்தவித இடையூறும் இல்லாதபடி பார்த்து கொள்ளப்படுகின்றது.

    மன்றாடியார் வனப் பகுதியிலும் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகின்றது. அதன்படி, டிரோன் மூலம் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. அறிவியல் பூர்வமாக புலியை பிடிக்க அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. 6 மருத்துவர்கள் குழுவினர் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆட்கொல்லி என இந்த T23 புலியை சொல்ல முடியாது.

    ஆட்கொல்லி புலியின் முதன்மை உணவாக மனிதர்களாக இருக்க வேண்டும். தினமும் 1 கிலோ உணவுவரை புலிக்கு தேவை. ஆட்கொல்லி புலியாக இதை எடுத்து கொள்ள முடியாது. புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்து அதை மருத்துவ குழுவினர் மூலம் கண்காணித்து அதன் நடவடிக்கைகள் ஆய்வு செய்யப்பட இருக்கின்றது. 4 மரணங்களில் முதல் இரு மரணங்கள் இந்த புலியால் நடந்தது என்பதை உறுதிப்படுத்த வில்லை. டி.என்.ஏ பரிசோதனை மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.

    Must Read : செம்பரம்பாக்கம் ஏரியில் ஒரேநாளில் நீர் மட்டம் கிடுகிடு உயர்வு

    வேட்டை தடுப்பு காவலர்களிக்கு ஊதியத்தை 15000 மாக உயர்த்த வேண்டும் என அரசு பி்ரதிநிதிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. புலியை பிடித்து கூண்டில் அடைத்தால் மனரீதியாக புலி பாதிக்கப்படும் என்பது உண்மை. ஆனால் அதை சரி செய்து கொள்ள முடியும் என்று கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: