முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கிருஷ்ண ஜெயந்தியன்று விரதம் இருந்ததற்காக மாணவர்களை அடித்து திட்டிய அரசுப் பள்ளி ஆசிரியர்!

கிருஷ்ண ஜெயந்தியன்று விரதம் இருந்ததற்காக மாணவர்களை அடித்து திட்டிய அரசுப் பள்ளி ஆசிரியர்!

கிருஷ்ண ஜெயந்தி அன்று யாரெல்லாம் விரதம் இருந்தீர்கள் என கேட்டு கை தூக்குமாறு கோரியுள்ளார்.

கிருஷ்ண ஜெயந்தி அன்று யாரெல்லாம் விரதம் இருந்தீர்கள் என கேட்டு கை தூக்குமாறு கோரியுள்ளார்.

கிருஷ்ண ஜெயந்தி அன்று யாரெல்லாம் விரதம் இருந்தீர்கள் என கேட்டு கை தூக்குமாறு கோரியுள்ளார்.

  • Last Updated :

    கிருஷ்ண ஜெயந்தியன்று விரதம் இருந்த மாணவர்கள் சிலரை அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் அடித்ததுடன், இந்து கடவுள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    சில தினங்களுக்கு முன்னர் தான் கிருஷ்ன ஜெயந்தி விமரிசையாக கொண்டாடப்பட்டது. வட மாநிலங்களில் இதனை ஜென்மாஷ்டமி என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். இந்நிலையில் கிருஷ்ண ஜெயந்தியன்று விரதம் இருந்த மாணவர்களை அடித்ததுடன், இந்து கடவுள் குறித்தும் ஆட்சேபிக்கத்தக்க வகையில் பேசிய ஆசிரியர் குறித்து வீடியோ மற்றும் ஆடியோக்கள் போன்ற ஆதாரங்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது,

    சட்டீஸ்கர் மாநிலம் கொண்டகன் மாவட்டத்தின் புந்தபுரா அருகேயுள்ள கிரியோலா எனும் கிராமத்தில் அரசுத் தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் மாணவர்கள் சிலர் கிருஷ்ண ஜெயந்திக்கு மறுதினமான செவ்வாயன்று பள்ளிக்கு சென்றனர்..

    அன்றைய தினம் மாணவர்களிடம் பேசிய பள்ளியின் ஆசிரியர் சரண் மர்க்கம் என்பவர், கிருஷ்ண ஜெயந்தி அன்று யாரெல்லாம் விரதம் இருந்தீர்கள் என கேட்டு கை தூக்குமாறு கோரியுள்ளார். விரதம் இருந்த மாணவர்கள் கை தூக்கிய போது அவர்களை மட்டும் தனியாக அழைத்து ஆசிரியர் மர்க்கம் அவர்களை அடித்ததுடன், கிருஷ்ண பகவான் குறித்தும் ஆட்சேபிக்கத்தக்க வகையில் கருத்துக்களை கூறி திட்டியதாக கூறப்படுகிறது.

    Also Read:  பெண் போல பேசி சிறுமிகளை சமூக வலைத்தளத்தில் இப்படியும் ஏமாத்துறாங்க.. யுடியூப் மூலம் மோசடி பாடம்!

    இச்சம்பவம் காட்டுத்தீயாக பரவி கிராம மக்களை அடைந்தது. இது குறித்து கேள்விப்பட்ட கிராம மக்கள் பள்ளிக்கு திரண்டு சென்று ஆசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த விவகாரத்தை மாவட்ட ஆட்சியர் வரைக்கும் சென்று புகார் அளித்தனர். சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட ஆடியோ, வீடியோ தரவுகளையும் அவர்கள் சமர்த்திருப்பதாக தெரியவந்திருக்கிறது.

    இதையடுத்து இது குறித்து விசாரணை நடத்துவதற்காக உயர் அரசு அதிகாரி ஒருவரை ஆட்சியர் நியமித்துள்ளார். இதனிடையே சம்பந்தப்பட்ட ஆசிரியர் சரண் மார்க்கமை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார். அதில் மத நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் பணி நீக்கம் செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து போலீஸ் தரப்புக்கும் புகார் சென்றிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    இதனிடையே, ஆசிரியரை கிராமத்தினர் அடித்ததாக எதிர்தரப்பில் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மலைவாழ் மக்கள் கூட்டமைப்பு ஒன்றின் சார்பில் இந்த புகார் கொடுக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

    top videos

      Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

      First published: