பள்ளிகள் திறப்பு குறித்து மருத்துவக் குழுவுடன் ஆலோசித்து முடிவு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து மருத்துவக் குழுவுடன் ஆலோசனை செய்த பின் முடிவு எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு குறித்து மருத்துவக் குழுவுடன் ஆலோசித்து முடிவு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • News18 Tamil
  • Last Updated: September 29, 2020, 4:03 PM IST
  • Share this:
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான தளர்வுகளுடனான ஊரடங்கு காலம் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது அவர், ‘தமிழகத்தில் தான் மிக அதிக கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை குறித்து வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்ய வேண்டும். இறப்பு விகிதத்தை மேலும் குறைக்க நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்.

10, 11, 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து மருத்துவ குழுவுடன் ஆலோசனை செய்த பின் முடிவு செய்யப்படும். கொரோனா காலத்திலும் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ள்ளன. வேலை வாய்ப்பை உருவாக்குவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 300 கோடி மதிப்பீட்டில் கொரோனா தொகுப்பு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக இதுவரை ரூ.7,800 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.


கொரோனா பாதிப்பில் இருந்து தமிழகம் மீண்டு வருவதாக ஆய்வில் தெரிவிக்கப்படுகிறது. வேளாண் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வேளாண் உற்பத்தியை பெருக்க வேண்டும். கால்வாய்கள், கண்மாய்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.
First published: September 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading