கோவில் திருவிழா, தியேட்டர், பள்ளிகள் இயங்க அனுமதி ? - இன்று முதல்வர் முக்கிய அறிவிப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் நாளை மறுநாள் காலையுடன் ஊரடங்கு முடிவடைகிறது.

 • Share this:
  தமிழகத்தில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்தது. தமிழகத்தில் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகமானது. இதனையடுத்து கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா பரவல் குறையத் தொடங்கியதையடுத்து பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மூன்றாவது அலை வர வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

  Also Read: சேரன் பாண்டியன் பட நடிகை சித்ரா காலமானார்

  இந்நிலையில் தமிழகத்தில்  ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்து தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெறவுள்ளது . இந்தக் கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர், மருத்துவ வல்லுநர்கள் கலந்துக்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் நாளை மறுநாள் காலையுடன் ஊரடங்கு முடிவடைகிறது. இந்நிலையில் ஊரடங்கை நீட்டித்து புதிய தளர்வுகளை தர ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த ஆலோசனைக்கூட்டத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக தெரிகிறது. தியேட்டர் உரிமையாளர்கள் திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்திருந்தனர். பள்ளிகள் திறப்பு, சினிமா தியேட்டர்  திறப்பது குறித்தும் ஆலோசிக்கபடும் எனத் தெரிகிறது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வழிபாட்டுத் தலங்களை திறக்க அரசு அனுமதி மறுத்துள்ளது. பொதுவாக ஆவணி மாதங்களில் நிறைய திருமணங்கள் நடைபெறும் என்பதால் கோயில்கள் திறப்பது குறித்து அலோசிக்கப்படும். 3-வது அலையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் இந்த கூட்டதில் ஆலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: