ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் பள்ளிகளை மூடுவது தொடர்பாக பொதுநல வழக்கு தாக்கல் செய்யலாம் - நீதிபதி கருத்து

தமிழகத்தில் பள்ளிகளை மூடுவது தொடர்பாக பொதுநல வழக்கு தாக்கல் செய்யலாம் - நீதிபதி கருத்து

பள்ளி மாணவிகள்

பள்ளி மாணவிகள்

தமிழகத்தில் பள்ளிகளில் நேரடி வகுப்பிற்கு தடை விதிக்க வேண்டுமென்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நெல்லையை சேர்ந்த அப்துல் வகாபுதின் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பள்ளிகளில் நேரடி வகுப்பிற்கு தடை விதிக்க வேண்டுமென மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில்,

  கொரோனா பரவல் அதிகரித்து உள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே பள்ளிகளிலில் நேரடி வகுப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என்ற மனுதாரர் தரப்பில் நீதிபதியின் முன் முறையீடு செய்யப்பட்டது.

  பள்ளியில் நடைபெறும் நேரடி வகுப்புகளுக்கு வர வேண்டும் என மாணவர்களை கல்வித்துறை கட்டாயபடுத்தவில்லை. மேலும் பள்ளிக்கு வராத மாணவர்களை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகளும் நடைபெறுகிறது என தமிழக பள்ளி கல்வி துறை சார்பில் உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  இந்த மனு தொடர்பாக உரிய தகவல்களுடன் புதிய பொது நல வழக்கு தாக்கல் செய்யலாம் என்று நீதிபதி கருத்து தெரிவித்தார். இதையடுத்து கொரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளில் வகுப்புகள் திறந்தாலும் , ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த உத்தரவிட வேண்டும் என கோரிய பொது நல வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

  Also Read : பள்ளி புத்தகப் பைகளில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை: நீதிமன்றம் உத்தரவு!

  தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வந்ததால் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vijay R
  First published:

  Tags: School