Home » News » Tamil-nadu » SCHOOLS OPENING 6 DAYS A WEEK SUR

வாரத்தின் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும்- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரிடம் கடிதம் பெற்று வரவேண்டும்.

வாரத்தின் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும்- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
பள்ளி மாணவிகள்
  • Share this:
வாரத்தின் ஆறு நாட்கள் பள்ளிகள் செயல்படும் என்று தெரிவித்துள்ள தமிழக அரசு, பள்ளிகள் திறப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள் கடந்த ஆண்டு மார்ச் 3ஆம் வாரம் முதல் மூடப்பட்டது. இந்நிலையில், 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொங்கல் விடுமுறைக்கு பிறன்னர், இம்மாதம் 19-ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதற்காக பள்ளிகளில் சுத்தம் செய்யும் பணிகள் நேற்று முதல் தொடங்கின. இந்நிலையில், பள்ளிகளுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க... ஜனவரி 19 முதல் பள்ளிகள் திறப்பு - தமிழக அரசு அறிவிப்பு


அதில், பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரிடம் கடிதம் பெற்று வரவேண்டும். தனியார் பள்ளிகள் திறப்பதற்கு முன் அனுமதி பெற வேண்டும். வகுப்பறைக்கு உள்ளே, வெளியே முகக்கவசம் அணிவது கட்டாயம். வாரத்தின் ஆறு நாட்கள் பள்ளிகள் செயல்படும்.

மேலும் படிக்க... என்னை முதலமைச்சராக தேர்வு செய்தது சசிகலா அல்ல- எடப்பாடி பழனிசாமி

ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும். 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் விரும்பினால் பள்ளிக்கு வரலாம். பெற்றோரின் சம்மதத்துடன் மாணவர்கள் வீட்டிலிருந்தே படிக்கலாம். மாணவர்களின் வருகையை கட்டாயப்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட வழிமுறைகளை அரசு அறிவித்துள்ளது.
First published: January 13, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading