தமிழகத்தில் 9,11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறப்பு

மாதிரிப் படம்

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தமிழகத்தில் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

 • Share this:
  தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டு வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டன.

  இதனிடையே, பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டன. இந்நிலையில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்துள்ளதை கருத்தில் கொண்டு, முதற்கட்டமாக பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு கடந்த மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டன. தொடர்ந்து 9 மற்றும் 11 வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

  நோய்த்தொற்று முன்னெச்சரிக்கையாக வகுப்பறைகளில் தனிமனித இடைவெளியை பின்பற்றுவது, பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து, சானிடைசர் வழங்குவது போன்றவை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. ஒரு வகுப்பில் 25 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவதோடு, மாணவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து வரவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

  மேலும், பள்ளிக்கு வரும் அனைத்து மாணவர்களும் பெற்றோரிடமும் ஒப்புதலுக்கான அனுமதிக் கடிதம் கட்டாயம் பெறவேண்டும் என, பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே ஏற்கெனவே இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்காக கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில் மற்ற மாணவர்களுக்கும் இன்று முதல் வகுப்புகள் நடைபெறுகின்றன.
  Published by:Sankaravadivoo G
  First published: