மாமல்லபுரத்தில் 3 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர்

news18
Updated: October 11, 2019, 8:13 AM IST
மாமல்லபுரத்தில் 3 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர்
news18
Updated: October 11, 2019, 8:13 AM IST
மாமல்லபுரத்தில் 3 நாட்களுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் இன்று மதியம் மாமல்லபுரம் நகரில் சந்தித்து பல்வேறு நல்லுறவு ஒப்பந்தங்கள் குறித்து பேச உள்ளார்கள். அதனால் மாமல்லபுரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. மாமல்லபுரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து வாகனங்களும் பலத்த சோதனைக்களுக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

இந்நிலையில் சீன அதிபர் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் இன்று முதல் அக்டோபர் 13-ம் தேதி வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


மேலும் மத்திய கைலாஷ்-சோழிங்கநல்லூர் வரை உள்ள சில தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றத்தால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்

Also watch

First published: October 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...