கனமழையால் வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை பெய்து வரும் நிலையில் நிலத்தடி நீர் மட்டம் உயரக் கூடும் என்பதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

news18
Updated: August 17, 2019, 8:36 AM IST
கனமழையால் வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
மழை
news18
Updated: August 17, 2019, 8:36 AM IST
தொடர் மழையால் வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர்.

வெப்பச்சலனம் காரணமாக காஞ்சிபுரம், சேலம், கடலூர், திருச்சி, தஞ்சை, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது. கனமழையால் சாலைகளில் தண்ணீர் வழிந்தோடியது. சில இடங்களில் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகினர். கனமழை பெய்து வரும் நிலையில் நிலத்தடி நீர் மட்டம் உயரக் கூடும் என்பதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

சென்னையில் சில நாட்கள் இடைவெளிக்கு பிறகு நேற்றிரவு மிதமான மழை பெய்தது. சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், அண்ணா நகர், போரூர் மட்டுமின்றி புறநகரான பூந்தமல்லி, மதுரவாயல், தாம்பரம் சுற்றுவட்டாரங்களில் மழை பெய்ததால் குளிர்ந்த சூழல் நிலவியது.


வேலூர் மாவட்டத்தில் இரவு முதல் மழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர்.

Also watch

First published: August 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...