முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கனமழை எதிரொலி : பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்துள்ள மாவட்டங்கள் விவரம்

கனமழை எதிரொலி : பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்துள்ள மாவட்டங்கள் விவரம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

School Holiday : தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை முதல் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் இன்றும் நாளையும் கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதி கனமழையும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தமிழத்தின் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்தது.

இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  தேனி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று  விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் முரளீதரன் அறிவித்துள்ளார்.

அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், கொடைக்கானல் மற்றும் சிறுமலையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதேபோல, நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை மீறி இயங்கும் பள்ளி, கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Must Read : கொடைக்கானல் அருவியில் போட்டோ எடுக்கும் போது தவறி விழுந்த இளைஞர் மாயம் - பதைபதைக்கும் காட்சிகள்

கோவை மாவட்டம் வால்பாறை பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் பருவமழை காரணமாக இன்று  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. பொதுத்தேர்வு வழக்கம் போல் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் காயத்ரி அறிவித்துள்ளார்.

First published:

Tags: Heavy rain, Holiday, Kodaikanal, School Holiday, Theni