ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை? - விவரம் இதோ

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை? - விவரம் இதோ

மழை

மழை

Rain school leave | கனமழை காரணமாக சென்னையில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

  இதனால் இன்று (04.11.2022) ஒருநாள் மட்டும் சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  அதேபோல திருவள்ளூர் மாவட்டத்திலும் மழை காரணமாக 4 தாலுகாவில் மட்டும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி, திருவள்ளூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

  காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் தாலுகாவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

  மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிடுள்ளார்.

  ' isDesktop="true" id="830573" youtubeid="mQrZJFyYzlI" category="tamil-nadu">

  Also see...திருச்சி மக்களுக்கு ஓர் நற்செய்தி - பிளாட்பாரம் டிக்கெட் குறைப்பு

  தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

  நாகையிலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் தம்புராஜ் அறிவித்துள்ளார். ஆனால் கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதேபோல புதுச்சேரியிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்று நேற்றே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்க்கது.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: College, Heavy Rainfall, School Holiday, School Leave