முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பள்ளி மாணவிகளை வீடியோ எடுத்து டார்சர் செய்த இளைஞர் - கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டிய மாணவிகள்

பள்ளி மாணவிகளை வீடியோ எடுத்து டார்சர் செய்த இளைஞர் - கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டிய மாணவிகள்

கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவன்

கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவன்

பள்ளி மாணவியை வீடியோ படம் பிடித்து பணம் கேட்டு மிரட்டியர் கல்லூரி மாணவனை கூலிப்படையை ஏவி கொன்று புதைத்தது காவல்துறையினர் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்து கொண்டு பணம் கேட்டு மிரட்டிய கல்லூரி மாணவனை, பத்தாம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகள் கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளனர். தமிழக - ஆந்திர எல்லைப்பகுதியான பெரிய ஒபுளாபுரம் அருகே ஏரிக்கரையோரத்தில் உள்ள குப்பை மேடு பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் ரத்தக் கறையுடன் சந்தேகத்திற்கிடமாக மண்ணில் அடையாளங்கள் உள்ளதாக ஆரம்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அங்கு சென்ற போலீசார் கும்முடிபூண்டி வட்டாட்சியர் மகேஷ் முன்னிலையில் சந்தேகத்துக்கிடமான இடத்தில் தோண்டி பார்த்தபோது  கொன்று புதைக்கப்பட்ட ஒரு இளைஞரின் சடலம்  இருந்தது. சடலத்தை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Also Read:  சிக்கிய சிங்க முகமூடி மனிதன்.. சுடுகாட்டில் மீட்கப்பட்ட நகைகள் - நடந்தது என்ன?

கொலை வழக்குப் பதிவு செய்து ஆரம்பாக்கம் போலீசார் விசாரணையை தொடங்கினர். இதற்கிடையில் ஓட்டேரி காவல் நிலையத்திலிருந்து ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு வந்த தகவல் புதிய திருப்புமுனையாக மாறியது. கொலை செய்யப்பட்ட இளைஞர் மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த பிரேம்குமார் என்பதும் தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்ததாகவும் அப்பகுதி காவல்துறையினர் கூறினர்.

கூடா நட்பு கேடாய் முடிந்தது:

இவருக்கு வண்டலூர் பகுதியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகளுடன் கடந்த ஒன்றை வருடமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது . இந்த மாணவிகளுடன் அடிக்கடி தனிமையில் இருந்த பிரேம்குமார் அதனை வீடியோ எடுத்து வைத்துள்ளார். அந்த வீடியோவை காட்டி மிரட்டி மாணவிகளிடம் பணம் பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. மிரட்டலுக்கு அஞ்சி ஒன்றரை லட்சம் வரை கொடுத்த மாணவிகள் அதற்கு மேல் கொடுக்க மனமின்றி மாணவனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Also Read: செல்போனுக்கு வந்த ஆபாச மெசேஜ்.. மாங்காடு பள்ளி மாணவி தற்கொலையில் சிக்கிய கல்லூரி மாணவர்

அதன்படி முகநூலில் பழக்கமான தனது நண்பர் அசோக்குமார் என்பவரின் உதவியுடன் கூலிப்படையை நாடிய மாணவிகள் பிரேம்குமாரை கொல்ல திட்டம் தீட்டினர். கடந்த வியாழக்கிழமை பிரேம் குமாரை தொலைபேசியில் அழைத்த மாணவிகள் கேட்டபடி பணம் தருவதாகவும் எளாவூர் சோதனை சாவடி அருகே வருமாறும் கூறியுள்ளனர்.அதனை நம்பி தனது நண்பர் பிரவீனுடன் அங்கு சென்ற பிரேம்குமாரை கூலிப்படையினர் சுற்றி வளைத்தனர்.

பிரேமை இரு சக்கர வாகனத்தில் கடத்திய கூலிப்படையினர் கொட்டா மேடு பகுதியில் தனிஅறையில் வைத்து 2 நாட்களாக சித்ரவதை செய்து மண்வெட்டியால் வெட்டி கொன்றுள்ளனர்.  அதன்பிறகு உடலை அந்த பகுதியில் குப்பைமேட்டில் புதைத்துவிட்டு தப்பியது விசாரணையில் தெரியவந்ததுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பத்தாம் வகுப்பு மாணவிகள் இருவரிடமும் போலீசார் விசாாரணை நடத்தி வருகின்றனர்.

First published:

Tags: Crime News, Leak video, Murder, Police, Sexual abuse, Video