காதலை ஏற்க மறுத்த மாணவியின் தாயாரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட பள்ளி மாணவர்

காதலை ஏற்க மறுத்த மாணவியை பழிவாங்க அவரின் தாயாரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட பள்ளி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காதலை ஏற்க மறுத்த மாணவியின் தாயாரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட பள்ளி மாணவர்
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: August 27, 2020, 12:24 PM IST
  • Share this:
சென்னை அசோக் நகர் பகுதியில் வசிக்கும் 40 வயதான பெண் தொழிலதிபரின் செல்போனுக்கு கடந்த சில நாட்களாக ஆபாச அழைப்புகளாக தொடர்ந்து வந்துள்ளது. இதனால் குழப்பமடைந்த அவருக்கு, அவரின் பெயரில் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதில், அவரது படங்களை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, அத்துடன் அவரது செல்போன் எண்ணையும் பகிர்ந்து ஆபாசமாக பேச அழைக்கவும் என பதிவிடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதற்கிடையே அவரது செல்போனுக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச வீடியோக்கள், ஆபாச போட்டோகள், ஆபாச குறுஞ்செய்திகள் வந்து குவிந்ததும், குமரன் நகர் காவல் நிலையத்தில் பெண் தொழிலதிபர் புகார் கொடுத்தார். இந்த புகார் குறித்து அடையாறு காவல் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரித்தனர்.


போலீசார் ஐபி முகவரியை வைத்து விசாரணை மேற்கொண்டதில் பெண் தொழிலதிபரை ஆபாசமாக சித்தரித்தது சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த 17 வயதான பள்ளி மாணவன் என்பதை கண்டுப் பிடித்தனர்.

அந்த மாணவனை பிடித்து நடத்திய விசாரணையில், புகார் கொடுத்த பெண் தொழிலதிபரின் மகள் படிக்கும் பள்ளியில் ஒன்றாக படிக்கும் மாணவர் என்பதும், நட்பு ரீதியாக பழகி வந்த நிலையில் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்ததும், இந்த விசயம் தெரியவந்ததும் அந்த மாணவி, அந்த மாணவனோடு பேசுவதை நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது.Also read... சென்னை நகைக்கடையில் இருந்து 14 கிலோ தங்கம் மாயம் - சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை!தோழி தன்னைவிட்டு பிரிந்து சென்றதற்கு அவரின் தாயார் தான் காரணம் என கருதி, அவரை பழிவாங்க மாணவியின் தாயார் பெயரில் புதிய இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கி, புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து ஆன்லைனில் நிர்வாண வீடியோ கால் அழைப்புக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண் என்று அவரது செல்போன் எண்ணை பதிவிட்டு பரப்பியது அம்பலமானது.

இதையடுத்து பள்ளி மாணவர் மீது தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவது, சமூக வலைதளத்தில் பெண்ணை பின்தொடர்ந்து தொந்தரவு செய்தல், மற்றும் பொது இடத்தில் பெண்ணின் நன்மதிப்பை கெடுக்கும் வகையிலான செயல்பாடு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, பள்ளி மாணவனை அரசு கூர் நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.
First published: August 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading