திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி
ஸ்டாலின் பங்கேற்ற பிரசார பயணத்தில், திமுக கொடி ஏந்தியபடி, பள்ளி சீருடையுடன், பள்ளி மாணவர்களை கரந்தைத் தமிழ்ச் சங்கம் பங்கேற்க வைத்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல், தஞ்சாவூர் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மேரீஸ்கார்னர் மற்றும் கீழவாசல் ஆகிய பகுதிகளில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.
Read More : காஞ்சிபுரம் மாநகராட்சி 36ஆவது வார்டு தேர்தல் ஒத்திவைப்பு
பின்னர் கும்பகோணம் மாநகராட்சி போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக சென்றபோது பள்ளிய அக்ரஹாரம் பகுதியில், கரந்தை தமிழ்ச் சங்கத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், திமுக கொடி ஏந்தியபடி, பள்ளி சீருடையில் நின்று அவரை வரவேற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் ராமநாதன் திமுக நிர்வாகி. இவரது பேரன் செந்தமிழ்செல்வன் தற்போது மாநகராட்சி தேர்தலில் 1-வது வார்டில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் மாணவர்களை ஈடுபடுத்தியதாக புகார்கள் எழுந்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.