• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அரசு பேருந்தில் படியில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள்...

அரசு பேருந்தில் படியில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள்...

 அரசு பேருந்து படியில் தொங்கியபடி பயணம்

அரசு பேருந்து படியில் தொங்கியபடி பயணம்

அரசு பேருந்தில் அரசு பள்ளி மாணவர்கள் பேருந்து படிகட்டில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொங்கிய படியும் சில மாணவர்கள் தன்னுடைய செல்லில் செல்பி எடுத்து ஆபத்தை உணராமல் பயணம் செய்துள்ளனர்.

  • Share this:
    ஆரணி அருகே ஆபத்தை உணராமல் அரசு பேருந்து படியில் தொங்கியபடியும் செல்பி எடுத்து பயணம் செய்யும் மாணவர்களின் செயல் சமூக வளைதலங்களில் வைரலாக பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள கண்ணமங்கலம் பேரூராட்சியில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகின்றன.

    மேலும் இந்த பள்ளியில் கண்ணமங்கலம் உட்பட்ட காளசமுத்தரம் அர்ஜீனபுரம் குப்பம் கொளத்துர் உள்ளிட்ட சுமார் 25க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து கண்ணமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    தற்போது 9வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகள் மட்டும் பள்ளிக்கு வருகின்றனர். இந்நிலையில் படவேட்டிலிருந்து அர்ஜீனபுரம் காளசமுத்திரம் கொளத்துர் மார்மாக செல்லும் அரசு பேருந்தில் அரசு பள்ளி மாணவர்கள் பேருந்து படிகட்டில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொங்கிய படியும் சில மாணவர்கள் தன்னுடைய செல்லில் செல்பி எடுத்து ஆபத்தை உணராமல் பயணம் செய்துள்ளனர்.



    இதனை தற்போது சமூக வளைதலங்களில் வைரலாக பரவி வருகின்றன. இதனால் உடனடியாக இந்த போன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்க மாணவர்களுக்கு கொளத்துர் காளசமுத்திரம் மார்கமாக செல்லும் பேருந்து வசதியை அதிகபடுத்த வேண்டும் படிகட்டல் தொங்கி செல்லும் மாணவர்களை அறிவுரை வழங்கி மாற்று பேருந்தில் செல்ல ஏற்பாடு செய்து தர மாவட்ட நிர்வாகத்திடம் சமூக ஆர்வலர்கள் கிராமத்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: