அதிகரிக்கும் தற்கொலை... அரசின் உதவி மைய எண் மாணவர்களை சென்றடைந்ததா?
அதிகரிக்கும் தற்கொலை... அரசின் உதவி மைய எண் மாணவர்களை சென்றடைந்ததா?
மாதிரிப்படம்
கடந்த ஆண்டு முதல் ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்கள் அதிகரித்தது அதிர்வலைகளை ஏற்டுத்தியது. இது சற்றே தணிந்த நிலையில், சமீபகாலமாக தற்கொலை செய்து கொள்ளும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், மாணவ மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கவும், விழிப்புணர்வுக்காகவும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ள உதவி மையத்தின் எண் 14417 மாணவர்களை சென்றடைந்ததா? என்பதை இந்த செய்தி தொகுப்பில் தெரிந்துக் கொள்ளலாம்.
மாணவர்கள் உயர் கல்வி சார்ந்த விழிப்புணர்வை பெறுவதற்காகவும், மனநலம் சார்ந்த ஆலோசனைகள் வழங்கவும் 14417 என்கிற விழிப்புணர்வு எண்ணை கடந்த 2017ம் ஆண்டு பள்ளிக் கல்வித்துறை அறிமுகப்படுத்தியது. இதற்கான பிரத்யேக மையம் சென்னை டி.பி.ஐ வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த விழிப்புணர்வு எண் பள்ளி வளாகங்கள் மற்றும் பாடப் புத்தகங்களிலும் அச்சிட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதில் கடந்த ஆண்டு முதல் ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்கள் அதிகரித்தது அதிர்வலைகளை ஏற்டுத்தியது. இது சற்றே தணிந்த நிலையில், சமீபகாலமாக தற்கொலை செய்து கொள்ளும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. உதவி மையத்தை அழைக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், மன அழுத்தம் கொண்ட மாணவர்களோ, தற்கொலை எண்ணம் உள்ள மாணவர்களின் அழைப்புகளோ மிகவும் குறைவாக இருப்பதாக உதவி மைய அலுவலர்கள் கூறுகின்றனர்.
தங்களுக்கு இருக்கும் பிரச்னைகள் வெளியே தெரிந்துவிடுமோ என அச்சத்திலேயே பல மாணவர்கள் இதனை பயன்படுத்தி கொள்வதில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் உதவி மையத்திற்கு அழைக்கும் மாணவ மாணவிகளின் விவரங்கள் பாதுகாக்கப்படும் என அரசு உறுதி அளித்துள்ளதை உதவி மைய அலுவலர்கள் மீண்டும் நினைவூட்டுகின்றனர்.
மாணவர் நலனுக்காக தான் 14417 உதவி மையம் இருக்கிறது என்பதை மாணவர்கள் புரிந்துகொண்டு, தங்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, எந்த தயக்கமும் இன்றி உதவி மையத்தை அழைத்து ஆலோசனை பெறலாம் என அலுவலர்கள் வலியுறுத்துகின்றனர். மாணவர்களிடையே ஏற்படும் இந்த விழிப்புணர்வு தான் வரும் காலங்களில் குற்றங்களை குறைக்கும் என்று நம்பலாம்.
Published by:Vaijayanthi S
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.