சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையைத் திரும்பப்பெறக் கோரி மாணவர்கள் கடிதம்

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையைத் திரும்பப்பெறக் கோரி மத்திய அரசுக்கு மாணவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையைத் திரும்பப்பெறக் கோரி மாணவர்கள் கடிதம்
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையைத் திரும்பப்பெறக் கோரும் மாணவர்கள்
  • Share this:
பெரு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், சுரங்கங்கள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை எளிதாக பெறும்படியாக சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2006ல் பல்வேறு திருத்தங்களைக் கொண்டு வந்தது. அதன் வரைவு அறிவிக்கையை பொதுமக்கள் கருத்திற்காக மத்திய அரசு வெளியிட்டிருந்தது.

தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் மற்றும் சுற்றுச்சூழல் இயக்கங்கள் அந்த வரைவு அறிவிக்கைக்கு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றன. இந்த நிலையில், சென்னை காலநிலை செயல்பாட்டுக் குழு என்ற அமைப்பு தமிழகத்தில் செயல்பட்டு வரும் 75 இளைஞர் அமைப்புகளைத் திரட்டி அவர்களின் ஒப்புதலுடன் வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கூறி, மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான  அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இந்த அமைப்புகள் மட்டுமின்றி 1900 பள்ளி மாணவர்களும் இந்தக் கடிதத்திற்கு தங்களது ஒத்துழைப்பைத் தந்துள்ளனர். இந்த வரைவு அறிக்கை அரசியமைப்பிற்கு எதிராகவும், விதிகளை மீறுவோருக்கு ஆதரவாகவும், பொது மக்கள் கருத்துக் கேட்பைப் புறக்கணிப்பதாகவும் இருப்பதால் அதைத் திரும்பப் பெற வேண்டும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Also read: கோவை, நீலகிரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்

இது குறித்து நம்மிடம் பேசிய சூழலியல் ஆய்வாளர் விஷ்வஜா சம்பத், "சுற்றுச்சூழல் விவகாரத்தில் ஒரு முடிவை எடுப்பது நம்மை மட்டும் பாதிக்காமல் எதிர்கால சந்ததிகளையும் சேர்த்து பாதிக்கிறது. தற்போது குழந்தைகளாக இருப்பவர்களின் கருத்தையும், அவர்களுக்கான பாதுகாப்பான ஒரு உலகமாக எதிர்காலம் இருக்க வேண்டுமென்பதையும் முடிவெடுக்கும் அதிகாரம் பெற்றிருப்பவர்கள் புறக்கணிக்கக் கூடாது. இதற்காகவே இளைஞர்கள், குழந்தைகளின் கருத்தையும் பெற்று மத்திய அரசிற்கு அனுப்பியுள்ளோம்" எனத் தெரிவித்தார்.
First published: August 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading