சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் வீடியோ... குழந்தைகள் பாதுகாப்பு அலகு விசாரணை...!

சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் வீடியோ... குழந்தைகள் பாதுகாப்பு அலகு விசாரணை...!
  • News18
  • Last Updated: February 20, 2020, 11:42 AM IST
  • Share this:
சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய பள்ளி மாணவர் ஒருவர் மாணவிக்கு செயின் அணிவிக்கும் வீடியோ குறித்து குழந்தைகள் பாதுகாப்பு அலகு விசாரணை நடத்தி வருகிறது.

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. ஒரு மாணவன், பள்ளிச் சீருடையில் உள்ள மாணவி கழுத்தில் தாலி கட்டுவது போல் நடித்து செயினை அணிவிக்கிறார்.

அந்த மாணவியும் வெட்கத்தில் தலை குனிந்தபடி செயினை தாலி போல் ஏற்றுக் கொள்கிறார். 22 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ பார்ப்பவர்களை அதிர வைக்கிறது. காட்சிகளின் பின்னணியில் சாமி படத்தில் வரும் ‘இதுதானா, இதுதானா’ பாடலும் ஒலிக்கிறது.


விளையாட்டாக வீடியோ எடுக்கப்பட்டதா? என்று பல கேள்விகள் எழுந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு அலகு விசாரணை நடத்தியது. வீடியோவில் இருக்கும் மாணவர் மற்றும் மாணவி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
First published: February 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்