பப்ஜி கேம் மோகம் - ஸ்மார்ட்போன் வாங்கி தராததால் மாணவன் தற்கொலை

திருப்பத்தூர் அருகே பப்ஜி விளையாட பெற்றோர் ஸ்மார்ட் போன் வாங்கித் தரவில்லை எனக்கூறி, 10ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்டார். சக மாணவர்களால் பப்ஜி கேம் வெறிக்கு தூண்டப்பட்டு, தற்கொலை செய்து கொண்டது எப்படி?

பப்ஜி கேம் மோகம் - ஸ்மார்ட்போன் வாங்கி தராததால் மாணவன் தற்கொலை
பப்ஜி கேம் பஞ்சாயத்து.. மாணவன் தற்கொலை..
  • Share this:
ஊரடங்கின் போது இளைஞர்கள் பலர் உணவை மறந்து, ஆன்லைன் விளையாட்டே கதி என கிடக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை கட்டிப்போட்டுள்ள முக்கிய கேம் பப்ஜி.. சுடு.. கொல்லு.. வெட்டு.. என நொடிக்கு நொடி வெறியேற்றும் பப்ஜி விளையாட்டில் மூழ்கிவிட்டால் உலகம் மறந்துவிடும்.. ஆனால், அந்த கேம் உலகத்திற்குள் போக தொல்லை கொடுத்தால் இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்வதுதான் அதிர்ச்சி.. திருப்பத்தூரில் நடந்தது என்ன?

திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு அடுத்த ஓமக்குப்பம் கொல்லக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் திருமூர்த்தி. 15 வயதான இவரது மகன் தினேஷ்குமார் மிட்டூர் அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு முடித்துவிட்டு 10 வகுப்புக்கு சென்றார்.

ஊரடங்கால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், செவ்வாய்க்கிழமை பள்ளிக்குச் சென்று இலவச பாடபுத்தகத்தை வாங்கி வந்துள்ளார். பெற்றோர் வீட்டில் இல்லாத நிலையில், தாயின் சேலையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீடு திரும்பிய பெற்றோர் மகன் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.


அக்கம்பக்கத்தினர் குரிசிலாப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அங்கு சென்று சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து சிறுவன் தற்கொலைக்கான காரணம் குறித்து, பெற்றோர், கிராம மக்கள், நண்பர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஊரடங்கால் பள்ளிகள் திறக்காததால் நண்பர்களுடன் தினேஷ்குமார் விளையாடி வந்துள்ளார். நண்பர்கள் அனைவரும் கையில் செல்போனுடன் பப்ஜி கேம் விளையாடி வந்துள்ளனர். இதனால், தனக்கும் ஸ்மார்ட்போன் வேண்டும் என பெற்றோரிடம் தினேஷ்குமார் கேட்டுள்ளார்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய தினேஷ்குமாரின் தந்தை திருமூர்த்தியால் மகனுக்கு ஸ்மார்ட் போன் வாங்கித்தர முடியவில்லை. செவ்வாய்க்கிழமை பள்ளியில் புத்தகத்தை வாங்கிவிட்டு வீடு திரும்பியபோது, சக மாணவர்கள் கையில் ஸ்மார்ட் போனுடன் பப்ஜி கேம் விளையடியுள்ளனர்.அவர்கள் அருகில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த தினேஷ்குமார், தனக்கும் பப்ஜி கேம் விளையாட வேண்டும் என ஆசையாக உள்ளதாகக்கூறி, நண்பர்களிடம் மொபைல் போன் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் யாரும் மொபைல் போன் தரவில்லை எனக்கூறப்படுகிறது.

இதனால், மன உளைச்சலுக்கு ஆளான தினேஷ்குமார் நேராக வீட்டுக்குச் சென்று தாயின் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அதேசமயம், சிறுவனின் மரணத்திற்கு பப்ஜி கேம் விளையாட செல்போன் வாங்கித்தராததுதான் காரணமா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க...பெண் வி.ஏ.ஓ - ஊராட்சி தலைவர் இடையே தவறான உறவு என தாக்கப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம்ஆசை வார்த்தை சொல்லி பதின்பருவத்தினரை ஏமாற்றுவது இது போன்ற திடீர் தற்கொலைக்கு காரணமாக அமைந்துவிடும் என்று எச்சரிக்கின்றனர் மன நல மருத்துவர்கள்.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
First published: August 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading