Home /News /tamil-nadu /

Headlines Today : பள்ளி திறப்பு தேதி இன்று அறிவிப்பு - தலைப்புச் செய்திகள் (மே 25-2022)

Headlines Today : பள்ளி திறப்பு தேதி இன்று அறிவிப்பு - தலைப்புச் செய்திகள் (மே 25-2022)

மாதிரி படம்

மாதிரி படம்

Headlines Today : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, வரும் கல்வியாண்டில் காலாண்டு அரையாண்டு தேர்வுகள் நடைபெற உள்ள தேதி கால அட்டவணையை இன்று வெளியிடுகிறார்.

  அடுத்த கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வு தேதி இன்று அறிவிப்பு, பள்ளி திறப்பு தேதி உள்ளிட்ட தகவல்களையும் வெளியிடுகிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்.

  சமையல் எண்ணெய் விலையை கட்டுப்படுத்த இறக்குமதி வரி ரத்து; சர்க்கரை ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடுகளை விதித்தது மத்திய அரசு.

  2014-ம் ஆண்டில் இருந்த அளவிற்கு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்றால், மத்திய அரசு தான் மேலும் வரியை குறைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

  சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் பாஜக நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

  சிறையில் செல்போன் பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து முருகனை விடுதலை செய்து, வேலூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  திருநெல்வேலியில் குவாரி அதிபர்கள் ஏற்பாடு செய்த வாகனத்தில் சென்று குவாரிகளை அதிகாரிகள் ஆய்வு செய்வதாக புகார் எழுந்துள்ளது.

  சென்னை விமான நிலையத்தில் ஹெராயின் மாத்திரைக் குப்பிகளை விழுங்கி வந்த உகாண்டா நாட்டு பயணி சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.

  ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 36 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக அறிவித்த ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 3 கோடியே 41 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

  வெடி பொருட்கள் தயாரிக்கும் மூலப் பொருட்களை இலங்கைக்கு கடத்த முயன்ற வழக்கில் கைதானவர்களில் 5 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

  சென்னையில் 2 நாட்களுக்கு வெப்பத்தின் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகும் என்றாலும், சில நாட்களில் மிதமான மழை பெய்யும் என்கிறார் பாலச்சந்திரன்.

  ஆந்திர மாநிலத்தில் கோணசீமா மாவட்டத்தின் பெயரோடு அம்பேத்கர் என்ற பெயரை சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற ஊர்வலத்தில் கலவரம் வெடித்தது. வன்முறையில் அமைச்சர் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது.

  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான, ஜூன் மாத இலவச தரிசன டிக்கெட்டுகள், ஆன்லைனில் நாளை வெளியிடப்படுகிறது.

  2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியில் புதிதாக மூன்று குழுக்களை அமைத்து அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்

  பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவும், ஜப்பானும் ஒப்புக் கொண்டுள்ளன.

  உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கி 3 மாதங்கள் நிறைவடைந்துள்ளன.

  இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், பேருந்துக் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பள்ளிக்குள் புகுந்து இளைஞர் நடத்திய சரமாரி துப்பாக்கிச்சூட்டில் 18 குழந்தைகள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர்.

  தண்ணீர் பற்றாக்குறையால், இன்னும் மூன்று ஆண்டுகளில் பாகிஸ்தான் வறண்டு விடும் அபாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

  நடிகரும், பிரபல இயக்குநருமான டி.ராஜேந்தரை, சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்ல உள்ளதாக அவரது மகன் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

  தமிழ் சினிமா நகைச்சுவையின் ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’ கவுண்டமணியின் பிறந்த நாள் இன்று.

  Must Read : பெட்ரோல், டீசல் விலையை குறைத்துவிட்டதாக மக்களை பாஜக ஏமாற்றி வருகிறது - திருமாவளவன் குற்றச்சாட்டு

  செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சென்னையின் பிரக்யானந்தா.

  ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் தகுதிச்சுற்று போட்டியில், ராஜஸ்தான் அணிக்கு எதிராக, குஜராத் அணி அசத்தல் வெற்றிபெற்றது.

  கோவில்பட்டியில் நடைபெறும் தேசிய ஜூனியர் ஹாக்கித் தொடரில், ஒடிசா அணி காலியிறுதிக்கு முன்னேறியுள்ளது.

  பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா இணை, இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்துள்ளது.
  Published by:Suresh V
  First published:

  Tags: Headlines, Today news, Top News

  அடுத்த செய்தி