ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தொடரும் கனமழை.. தமிழகத்தில் 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தொடரும் கனமழை.. தமிழகத்தில் 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

பள்ளிகளுக்கு விடுமுறை

பள்ளிகளுக்கு விடுமுறை

School leave | தமிழகத்தில் மழை தீவிரமடைந்து வருவதையடுத்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தமிழகத்தில் தொடர்ந்து 3வது நாளாக மழை தொடர்ந்து வருவதால் 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    தமிழ்நாட்டில் 5 நாட்கள் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வட இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வடகிழக்குப் பருவமழை கடந்த 29-ம் தேதி தொடங்கிய நிலையில், தமிழகத்தில் மழை தீவிரமடைந்து வருகிறது. இதன் படி தமிழகத்தில் ஆங்காங்கே நேற்று முதல் கனமழை நீடித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தும், வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    Published by:Anupriyam K
    First published:

    Tags: Heavy rain, MET warning, School Leave, Weather News in Tamil