Tamil News Live : அமைச்சராக பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின்

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

  • News18 Tamil
  • | December 14, 2022, 11:26 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 3 MONTHS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    13:25 (IST)

    விருத்தாசலம் அருகே திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பொதுமக்களை ஏற்றி வந்த டாட்டா ஏசி 4 வயது சிறுமியின் மீது மோதியதில் தாயின் கண் முன்னே பலி.. விருத்தாச்சலம் அருகே சோகம்


    13:21 (IST)

    கோபாலபுரம் இல்லத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை.

    திமுகவின் இளைஞர் அணி துணை செயலாளர் ஜோயல் மற்றும் மாநில நிர்வாகிகள் பிரம்மாண்ட மாலை அணிவித்து வரவேற்பு.

    13:21 (IST)

    அமைச்சர் உதயநிதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலாக்காக்களுக்கு 3 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளர் - அத்துல்யா மிஸ்ரா ஐஏஎஸ்

    சிறப்பு திட்ட அமலாக்கத்துறை - உதயச்சந்திரன் ஐஏஎஸ்

    வறுமை ஒழிப்பு திட்டம் மற்றும் ஊரக கடன்கள் - அமுதா ஐஏஎஸ்

    12:41 (IST)
    11:23 (IST)

    அமைச்சராக பொறுப்பேற்றார் உதயநிதி 

    இளைஞர் நலன் , விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின். தலைமை செயலகத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்தார். அவரை வரவேற்ற மூத்த அமைச்சர்கள் இருக்கையில் அமர வைத்தனர். அமைச்சராக முதல் கோப்பில் கையெழுத்திட்டார் உதயநிதி ஸ்டாலின். 

    10:59 (IST)

    இந்து சமய அறநிலைதுறை  அமைச்சர் சேகர் பாபுவிற்கு கூடுதலாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

    10:59 (IST)

    அமைச்சர் ராமச்சந்திரனுக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கீடு

    10:58 (IST)

    அமைச்சர் பெரிய கருப்பனுக்கு கூட்டுறவுத்துறை ஒதுக்கீடு

    10:58 (IST)

    அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சித்துறை ஒதுக்கீடு

    10:52 (IST)

    10 அமைச்சர்களின் துறைகள் மாற்றம்