முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு!

கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு!

பள்ளிகளுக்கு விடுமுறை

பள்ளிகளுக்கு விடுமுறை

Tamilnadu Rain | தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிகாலை முதலே மழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன் படி இன்று பல்வேறு இடங்களில் மழை கொட்டி தீர்த்து வருகிறது.

அந்த வகையில், நாகை மாவட்டம் வேதாரண்யம், கீழ்வேளூரில் காலை முதல் 2 முதல் 3 செண்டி மீட்டர் வரை மழை பதிவாகியுள்ளது. கனமழை தொடர்ந்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் அவதிக்குள்ளாகினர். இதனை கருத்தில் கொண்டு நாகை மாவட்ட ஆட்சியர் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (பிப்ரவரி 2) விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்திலும் அதிகாலை முதலே கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (பிப்ரவரி 2) விடுமுறை அளித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதே போன்று மயிலாடுதுறை மாவட்டத்திலும் இரவு முதலே மழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

First published:

Tags: Nagapattinam, School Leave, Tamil Nadu Rain, Thiruvarur, Weather News in Tamil