• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • School Holiday : கன மழையால் தமிழகத்தின் 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

School Holiday : கன மழையால் தமிழகத்தின் 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

மழை

மழை

கனமழை காரணமாக சென்னை, கடலூர், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    வகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. அதன்படி சென்னை, கடலூர், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி சென்னை, அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தஞ்சாவூர், கடலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, நாகப்பட்டிணம், நாமக்கல், திருவாரூர், திருப்பத்தூர், கரூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, வேலூர் ஆகிய  மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் ஏற்கெனவே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், புதுச்சேரி, காரைக்கால் ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வருகிற நவம்பர் 5,6 ஆகிய இரு தினங்களுக்கும் அரசு விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவுவிட்டுள்ளது.\

    இந்நிலையில், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் இரண்டாவது நாளான இன்றும் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டுவிட்டு மிதமான மழை பெய்தது. ஓரிரு இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்ததோடு, போக்குவரத்தும் நெரிசலும் காணப்பட்டது. அத்துடன், இரவில் புறநகர் பகுதிகளில் மழை தொடர்ந்தது.

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் உள்ள நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதுகுறித்து நீர்வளத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள 90 நீர்த்தேக்கங்கள் சராசரியாக 81.65 சதவிகிடம் கொள்ளளவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Must Read : தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை எச்சரிக்கை

    குறிப்பாக, சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நீர்தேக்கங்களான பூண்டி நீர்தேக்கம் 87.19 சதவிகிதமும், சோழவரம் 77.98 சதவிகிதமும், செங்குன்றம் 82.79 சதவிகிதமும், செம்பரம்பாக்கம் 77.15 சதவிகிதமும், தேர்வாய் கண்டிகை 94 சதவிகிதமும் நிரம்பியுள்ளது. அதேபோல் ஆண்டியப்பனூர் ஓடை, மோர்த்தனா, குண்டாறு, சோத்துப்பாறை, சாஸ்தா கோவில், வரட்டுப்பள்ளம் ஆகிய நீர்தேக்கங்கள் 100% கொள்ளளவை எட்டியுள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: