• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • School holiday: கன மழையால் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விமுமுறை

School holiday: கன மழையால் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விமுமுறை

மழை

மழை

தமிழகத்தில் தீபாவளி வரை 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • Share this:
    கன மழை காரணமாக கள்ளக்குறிச்சி, வேலூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம் மற்றும் திருநெல்வேலி ஆகிய ஆறு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பட்டுள்ளது. தமிழகத்தில் தீபாவளி வரை 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.

    மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவித்துள்ளார். இதேபோல, கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடுப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார். இதேபோல திருவாரூர் மாவடத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என  நேற்றே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டுள்ளார். இதேபோல திருநெல்வேலி மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மாவட்டத்தில் அனைத்து பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் அறிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் நள்ளிரவு முதல் அதிகாலை வரையில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், தற்போது லேசான தூரல் மழை மட்டுமே பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவதற்கு வாய்ப்பில்லை என்றும், திட்டமிட்டபடி 1 முதல் 8ம் வகுப்பு வரையில் பள்ளிகள் துவங்கும் என்றும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

    Must Read : கடலூர், தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மிக கன மழை எச்சரிக்கை

    தமிழகத்தில் தீபாவளி வரை 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் அடுத்த இரு நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிக கன மழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: