Home /News /tamil-nadu /

School holiday : கனமழையால் நெல்லை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

School holiday : கனமழையால் நெல்லை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

மாதிரி படம்

மாதிரி படம்

தமிழகத்தில் தீபாவளி வரை 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழையால் திருநெல்வேலி, கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் ஏற்கெனவே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டுள்ளார். இதேபோல திருநெல்வேலி மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 17 மாதங்களுக்குப் பிறகு இன்று, 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையொட்டி, தொடக்கக் கல்வி இயக்குநரகம் பள்ளிகளுக்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. அதில், பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதல்கள், புத்தாக்க பயிற்சிக் கட்டகங்கள் ஆகியவை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், தமிழகத்தில் தீபாவளி வரை 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் அடுத்த இரு நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிக கன மழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி, புதுவை, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இடி, மின்னலுடன், கனமழையும், ஏனைய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும் பெய்யக் கூடும். குமரிக் கடல், மன்னார் வளைகுடா, இலங்கை கடற்பகுதியை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் அங்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் நேற்று காலை முதலே மாவட்டம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்றும் கனமழை பெய்து வருகிறது. கனமழையால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. பள்ளி வளாகங்களிலும் தண்ணீர் தேங்கி உள்ள நிலையில், இன்று கடலூரில் பள்ளிகளுக்கு மட்டும் ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் இன்று உத்தரவிட்டுள்ளார்.

    Must Read : கடலூர், தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மிக கன மழை எச்சரிக்கை

    இதேபோல, விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Heavy rain, School Holiday, School Leave

    அடுத்த செய்தி