”வேலியே பயிரை மேய்ந்த கதை”... 6-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... ஆசிரியர் கைது

இந்த சம்பவத்தை தொடர்ந்து குழந்தைகள் நல அதிகாரிகள் அந்த பள்ளியில் உள்ள மாணவிகளுக்கு பாலியல் விழிப்புணர்வு மற்றும் கவுன்சிலிங் கொடுத்தனர்.

Web Desk | news18
Updated: July 11, 2019, 10:17 PM IST
”வேலியே பயிரை மேய்ந்த கதை”... 6-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... ஆசிரியர் கைது
பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்
Web Desk | news18
Updated: July 11, 2019, 10:17 PM IST
குமரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாத்திமாபுரம் கல்பாறை பொற்றை பகுதியில் கன்கார்டியா லுத்தரன் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் படந்தாலுமூடு அருகே ஆம்பாடி பகுதியைச் சேர்ந்த டேவிட்ராஜ் என்பவர் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் மூன்று பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகளின் பெற்றோர் சிலர் நேரில் பார்த்ததை தொடர்ந்து இதுகுறித்து ’சைல்ட் ஹெல்ப் லைன்’ 1098 என்ற எண்ணுக்கு அழைத்து தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து குழந்தைகள் நல அதிகாரி சோபியா விஜயராணி பள்ளிக்கு நேராகச் சென்று விசாரணை நடத்தினார். அப்போது மாணவர்களின் பெற்றோர் பள்ளியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பரபரப்பு ஏற்பட்டதை கண்ட ஆசிரியர் டேவிட்ராஜ் தப்பி ஓட முயற்சி செய்தார். அந்த நேரத்தில் அங்கு வந்த கொல்லங்கோடு போலீசார் அவரை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் டேவிட்ராஜ் -ஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனிடையே பள்ளியில் குவிந்த பெற்றோர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், இந்த ஆசிரியருக்கு அதிகப்படியான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள சட்டத்தின்படி இவருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து குழந்தைகள் நல அதிகாரிகள் அந்த பள்ளியில் உள்ள மாணவிகளுக்கு பாலியல் விழிப்புணர்வு மற்றும் கவுன்சிலிங் கொடுத்தனர்.

”வேலியே பயிரை மேய்ந்த கதை” யாக மாணவிகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஆசிரியரே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் குமரி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also watch: ரத்தத்துக்கு ரத்தம்... பழிக்குப் பழி... என மதுரையில் ஒரு கொடூரக் கொலை...!

First published: July 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...