பள்ளி மாணவியை ஏமாற்றி பாலியல் உறவு... பாமக பிரமுகர் போக்சோவில் கைது..!

பாமக நிர்வாகி சத்தியா
- News18
- Last Updated: January 30, 2020, 9:41 AM IST
திருமணம் செய்து கொள்வதாக பள்ளி மாணவியுடன் தவறான உறவு வைத்துக் கொண்ட பாமக வட்ட செயலாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை டிபி சத்திரம் பகுதியை சேர்ந்தவர் 17 வயதான பள்ளி மாணவி. சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் கடந்த 27-ம் தேதி காலை பள்ளிக்குச் சென்று மாலையில் வீடு திரும்பவில்லை. 28-ம் தேதியும் இவர் வீடு திரும்பாத காரணத்தால் பெற்றோர்கள் டிபி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் (28-01-2020) மாலை கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காணாமல் போன பள்ளி மாணவி, டிபி சத்திரம் பகுதியை சேர்ந்த சத்தியா 32 என்பவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி ஏமாற்றி விட்டதாக புகார் அளித்தார்.
வழக்கு பதிவு செய்த போலீசார் சத்யாவை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் சத்தியா டிபி சத்திரம் 102 வது பகுதி பாமக வட்ட செயலாளர் என்பது தெரியவந்தது.
பள்ளி மாணவியும் சத்யாவும் முகநூல் மூலமாக சில மாதங்களுக்கு முன் பழக்கமாகி உள்ளனர். தனக்கு திருமணம் ஆகவில்லை எனவும் அதனால் உன்னை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி பள்ளி மாணவியை நம்ப வைத்துள்ளார்.இந்த நிலையில் 27-ம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவியை திருமணம் செய்து கொள்வதாக அழைத்துச்சென்று மாணவியுடன் தவறான உறவு உறவு வைத்துள்ளார். அதன் பின்பு பாமக வட்ட செயலாளருக்கு திருமணம் ஆன விஷயம் பள்ளி மாணவிக்கு தெரியவர, அவர் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பாமக வட்ட செயலாளரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை டிபி சத்திரம் பகுதியை சேர்ந்தவர் 17 வயதான பள்ளி மாணவி. சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் கடந்த 27-ம் தேதி காலை பள்ளிக்குச் சென்று மாலையில் வீடு திரும்பவில்லை. 28-ம் தேதியும் இவர் வீடு திரும்பாத காரணத்தால் பெற்றோர்கள் டிபி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.