பத்தாம் வகுப்பு மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த பக்கத்துவீட்டு இளைஞர் கைது!

வலியில் சிறுமி சத்தம்போடவே பயந்துபோன, கல்யாணசுந்தரம் சிறுமியின் கழுத்தில் காலை வைத்து அழுத்தியுள்ளார். இதில் மூச்சுத்திணறி அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.

Karthick S | news18
Updated: November 10, 2019, 8:37 PM IST
பத்தாம் வகுப்பு மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த பக்கத்துவீட்டு இளைஞர் கைது!
மாதிரிப் படம்
Karthick S | news18
Updated: November 10, 2019, 8:37 PM IST
சீர்காழி அருகே 10-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

நாகை மாவட்டம் சீர்காழி அருகே சித்தன்காத்திருப்பு பகுதியியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். தீபாவளி விடுமுறையை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமை பள்ளி செயல்பட்டது. சனிக்கிழமை பள்ளிக்குச் சென்ற சிறுமி மாலையில் வீடு திரும்பினார். பின்னர், உடல் உபாதையை கழிப்பதற்காக, வீட்டின் பின்னால் உள்ள காட்டுப்பகுதிக்கு சிறுமி சென்றார். சிறிது நேரத்தில் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.

இதனால் பயந்துபோன பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் பதறி அடித்து ஓடிப்போய் பார்த்தனர். அப்போது சிறுமி, ரத்தக்காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தார்.  அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.


இதுதொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின்பேரில், திருவெண்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் சம்பவ இடத்த்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். தொடர்ந்து அவர் உத்தரவின் பேரில், போலீசார் தீவிர விசாரணையைத் தொடங்கினர்.

அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்ததில் பிற்பகல் 3 மணி வாக்கில் இளைஞர்கள் சிலர், இளநீரில் மது கலந்து அப்பகுதியில் அருந்தி வந்ததாக கூறியுள்ளனர்.

இதனால் உள்ளூரைச் சேர்ந்த அந்த இளைஞர்கள் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.

Loading...

அவர்களை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த இளைஞர்களுக்கும் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதற்கும் தொடர்பில்லை என்பது தெரிய வந்தது.

இந்நிலையில் சிறுமியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் 30 வயதான கல்யாண சுந்தரம் என்ற இளைஞர், சிறுமியை தேடிச் சென்றபோது அந்த பகுதியிலிருந்து ஓடி வந்ததாகவும், பின்னர் தங்களுடன் சேர்ந்து சிறுமியை தேடியதாகவும் கிராமத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதை அடுத்து கல்யாணசுந்தரத்தை பிடித்து போலீசார் நடத்திய கிடுக்கிபிடி விசாரணையில், திடுக்கிடும் தகவல் கிடைத்தது. திருமணம் ஆகாமல் தனிமையில் இருந்த கல்யாணசுந்தரம், சிறுமியை தனது பாலியல் இச்சைக்கு பயன்படுத்த திட்டமிட்டு வந்துள்ளார்.

இதற்காக கடந்த சில நாட்களாக சிறுமியின் நடவடிக்கைகளை நோட்டமிட்டுள்ளார். சனிக்கிழமை மாலை சிறுமி உடல் உபாதையை கழிக்க காட்டுப்பகுதிக்கு செல்வதை பார்த்த கல்யாணசுந்தரம் பின்தொடர்ந்து சென்றுள்ளார். பின்னர் தனது ஆசைக்கு இணங்க சிறுமியை வற்புறுத்தி உள்ளார். அவர் மறுத்து கூச்சலிடவே, சிறுமியின் வாயைப் பொத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

வலியில் சிறுமி சத்தம்போடவே பயந்துபோன, கல்யாணசுந்தரம் சிறுமியின் கழுத்தில் காலை வைத்து அழுத்தியுள்ளார். இதில் மூச்சுத்திணறி அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.

பின்னர் கிராம மக்கள் ஓடி வருவதை பார்த்து, காட்டுக்குள் இருந்து வெளியில் ஓடிவந்து, அவர்களுடன் தானும் தேடுவதுபோல் நடித்ததாக போலீசாரிடம் கல்யாணசுந்தரம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதை அடுத்து கல்யாணசுந்தரத்தை திருவெண்காடு போலீசார் கைது செய்தனர். சிறுமி என்றும் பாராமல் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என பெற்றோர் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Also see:


First published: November 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...