• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பள்ளி மாணவியை ஆசை வார்த்தைகள் கூறி மயக்கி கடத்திச் சென்று பாலியல் தொல்லை...!

பள்ளி மாணவியை ஆசை வார்த்தைகள் கூறி மயக்கி கடத்திச் சென்று பாலியல் தொல்லை...!

Youtube Video

  • News18
  • Last Updated :
  • Share this:
    கொடைக்கானலில் பள்ளிக்குச் சென்ற 11-ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று 3 நாட்கள் பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    திண்டுக்கல் மாவட்டம் குறிஞ்சி நகரைச் சேர்ந்த மாணவி ஒருவர் கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 23-ம் தேதி பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.

    பெற்றோர் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    கொடைக்கானல் இந்திரா நகரைச் சேர்ந்த 24 வயதான கொத்தனார் ஜீவா மீது சந்தேகம் இருப்பதாகவும் பெற்றோர் தங்கள் புகாரில் கூறியிருந்தனர்.

    புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், புதன் கிழமை ஜீவா உடன் பேருந்தில் இறங்கி மாணவி நடந்து வந்துள்ளார். அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார், மாணவியை மீட்டனர்.

    மாணவி உடன் இருந்த இளைஞர் ஜீவாவை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அவர் பழகி வந்துள்ளார்.

    திங்கட்கிழமை உடன் பள்ளி விடுமுறை விட்ட நிலையில், வெளியில் சென்று வரலாம் எனக்கூறி மாணவியை அழைத்துள்ளார்.

    ஜீவாவின் பேச்சில் மயங்கிய அந்த மாணவியும் அவருடன் செல்ல சம்மதித்துள்ளார். இதை அடுத்து 3 நாட்களாக பல்வேறு ஊர்களுக்கு மாணவியை அழைத்துச் சென்றும், அறை எடுத்து தங்கியும் மாணவிக்கு ஜீவா பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    இந்நிலையில், மாணவி வீட்டில் போலீசில் புகார் அளித்த தகவல் அறிந்து ஊர் திரும்பியபோது சிக்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

    இதை அடுத்து ஜீவா மீது போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    11-ம் வகுப்பு மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி வெளியூருக்கு அழைத்துச் சென்று இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: