ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

செப்டம்பர் 1 முதல் அனைத்து பள்ளிகளும் திறப்பா? அமைச்சர் அப்டேட்!

செப்டம்பர் 1 முதல் அனைத்து பள்ளிகளும் திறப்பா? அமைச்சர் அப்டேட்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

நாடு முழுதும், தொடக்க பள்ளி முதல் அனைத்து வகை வகுப்புகளையும் திறந்து மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை நடத்துமாறு, இந்திய மருத்துவ கவுன்சிலான (ஐ.சி.எம்.ஆர்) அறிவுறுத்தியுள்ளது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி பள்ளிகள் திறப்பது குறித்து வருகின்ற 20ஆம் தேதி தமிழக முதல்வர் உடனான ஆலோசனைக்கு பிறகு முடிவெடுக்கப்படுமென மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

  தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு உத்தேசித்துள்ளதாக அண்மையில் தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது. பள்ளிகளை திறப்பதற்கு உண்டான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியாக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்..

  Also Read:  ‘ட்விட்டர் பறவை’யை பொறித்து டெல்லிக்கு பார்சலில் அனுப்பிய காங்கிரஸ் தொண்டர்கள் – வீடியோ!

  அதேசமயம், ஒன்றாம் வகுப்பு முதல் அனைத்து வகுப்புகளையும் நடத்தவும் கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் இன்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக் கல்வித்துறை தொடர்பான வளர்ச்சி மற்றும் துறை ரீதியாக விரிவான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வருகின்ற 20ஆம் தேதி பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக முதல்வருமான ஆலோசனைக்குப் பிறகு முடிவெடுக்கப்பட இருப்பதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.

  அந்த வகையில் 20ஆம் தேதிக்கு பிறகே செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து உறுதியான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  நாடு முழுதும், தொடக்க பள்ளி முதல் அனைத்து வகை வகுப்புகளையும் திறந்து மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை நடத்துமாறு, இந்திய மருத்துவ கவுன்சிலான (ஐ.சி.எம்.ஆர்) அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  Published by:Arun
  First published:

  Tags: News On Instagram, School Reopen, School students