தமிழைவிட சமஸ்கிருதம் தொன்மை என அச்சடிக்கப்பட்ட விவகாரத்தில் பள்ளிக் கல்வித்துறை நோட்டீஸ்!

தமிழ் மொழியே உலகின் மூத்த மொழி என தமிழ் அறிஞர்கள் கூறி வரும் நிலையில், சமஸ்கிருதத்துக்கு பின்பே தமிழ் தோன்றியது போல் மாணவர்கள் மத்தியில் பரப்பப்படுவதாக சர்ச்சை எழுந்தது.

Web Desk | news18
Updated: July 30, 2019, 10:17 AM IST
தமிழைவிட சமஸ்கிருதம் தொன்மை என அச்சடிக்கப்பட்ட விவகாரத்தில் பள்ளிக் கல்வித்துறை நோட்டீஸ்!
பள்ளிக் கல்வித்துறை வளாகம்
Web Desk | news18
Updated: July 30, 2019, 10:17 AM IST
தமிழ் மொழியை விட சமஸ்கிருதம் தொன்மையானது என பாடப்புத்தகத்தில் அச்சடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு பள்ளிக் கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பனிரெண்டாம் வகுப்பு ஆங்கில பாடப் புத்தகத்தில் மொழிகளின் தொன்மையான ஆண்டு பற்றி குறிப்பிடும் போது, தமிழ் கி.மு. 300 ஆண்டுகள் பழமையானது என்றும், சமஸ்கிருதம் கி.மு.2,000 ஆண்டுகள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது ஊடகங்கள் மூலம் தெரியவந்தது.

தமிழ் மொழியே உலகின் மூத்த மொழி என தமிழ் அறிஞர்கள் கூறி வரும் நிலையில், சமஸ்கிருதத்துக்கே பின்பே தமிழ் தோன்றியது போல் மாணவர்கள் மத்தியில் பரப்பப்படுவதாக சர்ச்சை எழுந்தது.


இதற்கு தமிழ் அறிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழ் மொழியைவிட சமஸ்கிருதம் தொன்மையான மொழி என தவறாக சித்தரிக்க முயன்ற நூலாசிரியர்கள் 13 பேருக்கு கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Loading...

தவறுக்கான காரணம் குறித்து 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டுமென்றும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Also see...

First published: July 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...