• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மாணவர்கள் பள்ளிகளுக்கு வருவதற்கு பெற்றோர் அனுமதி கடிதம் வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

மாணவர்கள் பள்ளிகளுக்கு வருவதற்கு பெற்றோர் அனுமதி கடிதம் வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

மாதிரி படம்

மாதிரி படம்

அரசுப் பள்ளி மாணவர்கள் பெற்றோர்களிடமிருந்து பள்ளிக்கு அனுப்புவது தொடர்பாக சம்மதம் தெரிவித்து கடிதம் பெற்று வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

  • Share this:
    இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது வரை தொடர்ந்து வருகிறது. கொரோனா முதல் அலை குறைந்த நாடு இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்த நிலையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா இரண்டாவது அலை பேரலையாக வந்தது. இரண்டாவது அலை யாரும் எதிர்பாராத அளவிலான மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதனால், மீண்டும் ஏப்ரல் மாதத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அப்போது மூடப்பட்ட பள்ளிகள் இன்று திறந்தன.

    தமிழ்நாட்டில் கடந்த 5 மாதங்களுக்கு பிறகு 9 முதல் 12ம் வகுப்பு வரை இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு வருவது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதில் பள்ளிகளுக்கு வரும் அனைத்து மாணவர்களும் பள்ளிகளுக்கு வருவது தொடர்பாக பெற்றோரின் கடிதம் பெற்று வர வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கை வாயிலாக அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் நீண்ட நாட்கள் மாணவர்கள் யாரேனும் வகுப்புகளுக்கு வராமல் இருந்தால் அது குறித்த விவரங்களை சேகரிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களின் இடைநிற்றலை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: